• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!!

ByKalamegam Viswanathan

Jun 3, 2025

முதலில் எல்லிஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் 34 இன்று செவ்வாய்க்கிழமை மாலை திருமங்கலத்தில் இருந்து எல்லீஸ் நகர் அவரது விலை உயர்ந்த பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

கப்பலூர் நான்கு வழிச்சாலையில் சாலை பராமரிப்பு பணி நடைபெறுவதால் ஒருவழி பாதையாக மாற்றி அமைக்கப்பட்டு வாகனங்கள் சென்று வருகிறது. இதனை அந்த வழியாக சென்ற ராஜசேகர் பின்னால் வந்த கர்நாடக எண் கொண்ட லாரி மோதியது தடுமாறி கீழே விழுந்தார்.

இந்த விபத்து லாரியின் சக்கரங்கள் ராஜசேகர் மீது ஏறி சென்றது. சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த திருமங்கலம் டவுன் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.