• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மதுரையின் வளர்ச்சி குறித்து சுற்றி பார்க்கவில்லை முதல்வர்..,

ByP.Thangapandi

Jun 1, 2025

மதுரையை சுற்றி பார்த்தவர் மதுரையின் வளர்ச்சி குறித்து சுற்றி பார்க்கவில்லை – அறிவாலயம் இடமாற்றம் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாக பார்க்க முடிகிறது – திமுக பொதுக்குழுவின் முகப்பு பகுதியில் அண்ணா அறிவாலயம் போன்று அமைக்கப்பட்டிருந்தது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட வாலாந்தூர், பசுக்காரன்பட்டி, அய்யனார்குளம், விக்கிரமங்கலம் பகுதியில் உள்ள அதிமுக வாக்குச்சாவடி பாக முகவர்கள் அமைப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் விக்கிரமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயக்குமார்.

முதல்வர் மதுரையை சுற்றி பார்த்தவர் மதுரையின் வளர்ச்சியை சுற்றி பார்க்கவில்லை, அவ்வாறு சுற்றி பார்த்திருந்தால் மெட்ரோ கிடைத்திருக்கும் விமான நிலையத்தின் சுரங்கபாதை கிடைத்திருக்கும். மேம்பாலங்கள் விரைவாக நடந்திருக்கும். கூட்டு குடிநீர் திட்டங்கள் கிடைத்திருக்கும். எல்லாம் எடப்பாடி பழனிச்சாமி, அம்மா அறிவித்த திட்டங்கள் அவையெல்லாம் இன்று ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன, சில திட்டங்கள் கிடப்பில் கிடக்கிறது.

விமான ஓடுதளம், சுரங்கப்பாதைக்கு மத்திய அரசு அனுமதியை முன்னாள் முதல்வர் எடப்பாடியார் பெற்றுக் கொடுத்தார். இப்போது உள்ள முதல்வர் அதை கிடப்பில் போட்டுள்ளார். அரசியல் கால்புணர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும்.

இது போன்று வளர்ச்சி குறித்து சுற்றி பார்த்து இருந்தால் மதுரை மக்களுக்கு ஏதாவது வளர்ச்சி கிடைத்திருக்கும்.

ஆனால் ஒன்றே ஒன்று செய்திருக்கிறார்கள் சென்னையில் இருந்த அண்ணா அறிவாலயத்தை மதுரைக்கு இடமாற்றம் ஆகியுள்ளது. இந்த இடமாற்றம் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாக பார்க்க முடிகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எடப்பாடியார் மீண்டும் அம்மாவின் ஆட்சியை மலர செய்வார் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

செல்லம்பட்டி பகுதியில் விளைந்த நெல்மணிகள் மழை வெள்ளத்தில் சேதமடைந்துள்ளது நிவாரணம் வழங்க வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தோம். விளைந்த பயிர்களை நெல் கொள்முதல் நிலையம் அமைத்து கொள்முதல் செய்ய வேண்டும், தனியாருக்கு கொடுப்பதால் 400 முதல் 600 வரை நஷ்டம் வருகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கவணத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம், அவ்வாறு கோரிக்கை வைக்கும் போது அப்போது இருந்த முதல்வர் செவி சாய்த்து கொள்முதல் நிலையம் அமைத்து கொடுத்தார். இப்போது இங்கு வந்துள்ள முதல்வருக்கு இதெல்லாம் தெரியவில்லை, அவர் ரோடு ஷோ என ஷோ காட்டுகிறார்.

பிரதான எதிர்கட்சி நாங்கள் சொல்கிறோம், தாழியை அடகு வைத்து விவசாயம் செய்கிறார்கள். தாழிக்கு தங்கம் திட்டமும் போய்விட்டது. தாழியும் போய்விட்டது இந்த அரசாங்கத்தில். ஆகவே அறிவாலயம் இடமாற்றம் தான் இந்த பொதுக்குழுவின் சாதனை யாக உள்ளது என பேட்டியளித்தார்.

இதில் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா, கழக அமைப்புசெயலாளர் ஐ.மகேந்திரன், சோழவந்தான் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் துரைதனராஜ், மாவட்ட மாணவரணிச்செயலாளர் மகேந்திரபாண்டி, மாவட்ட இலக்கிய அணிசெயலாளர் ரகு,மாவட்ட அணி செயலாளர் உஷா சுந்தரம்,பெருமாள், சின்னகாமன்,ஜெயராமன் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.