• Sun. Feb 1st, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

முதல்வரிடம் டிஎன்டி சான்றிதழ் கேட்டு மனு..,

ByKalamegam Viswanathan

May 31, 2025

மதுரை வரும் தமிழக முதல்வரிடம் டிஎன்டி ஒற்றை சான்றிதழ் கேட்டு மனு கொடுக்கப் போவதாக கூறிய சீர்மரபினர் மாநில தலைவி தவமணி சோழவந்தான் அருகே
மேலக்கால் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் சிறை வைப்பு

வீட்டில் சிறை வைக்கப்பட்ட சீர் மரபினர் சங்க மாநிலத் தலைவி தவமணி தனது ஆதரவாளுடன் சேர்ந்து தமிழக முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு

மதுரை மாவட்டம் மேலக்கால் கிராமத்தில் சீர் மரபினர் நலச்சங்க மாநில தலைவி தவமணி டிஎன்டி ஒற்றைச் சான்றிதழ் கேட்டு போராடி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு வடிவங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் அவர் இது சம்பந்தமாக முதல்வர் , மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசின் துறைகளுக்கு பல்வேறு மனுக்களை அனுப்பி உள்ளார். பல்வேறு தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் மதுரை வரும் தமிழக முதல் வருடம் டிஎன்டி ஒற்றை சான்றிதழ் கேட்டு மனு கொடுக்கப் போவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்திருந்த நிலையில் இதனை. அறிந்து கொண்ட காவல்துறையினர் அவரை வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். இதனால் அங்கு வந்த தவமணியின் ஆதரவாளர்கள் தவமணி வீட்டின் முன்பு கூடி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும் உடனடியாக டிஎன்டி சான்றிதழ் வழங்க கோரிக்கையும் விடுத்தனர்.

கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது ஸ்ரீவில்லிபுத்தூரில் முதல்வர் டி என் டி ஒற்றைச் சான்றிதழ் வழங்க ஆணை பிறப்பித்து விட்டு வந்ததாக தெரிவித்தார். ஆனால் தற்போது அரசு அதிகாரிகள் ஒற்றைச் சான்றிதழ் வழங்க மறுக்கின்றனர். என்று கூறிய தவமணி அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார். மேலும் விரைவில் டிஎன்டி ஒற்றைச் சான்றிதழ் வழங்காவிட்டால் வரும் தேர்தலில் மாநில அளவில் திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய போவதாகவும் திமுகவினர் வாக்குகள் கேட்டு வரும்போது ஊருக்குள் நுழைய விட மாட்டோம் என்றும் கூறி எச்சரிக்கை விடுத்தார்.

மதுரையில் முதல்வர் வரும் நிலையில் முதல்வர் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக சீர் பரவினர் நல சங்கத்தினர் போராட்டங்களை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தவமணியின் வீட்டிற்கு காவல்துறையினர் பெண் உட்பட நான்கு பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.