சிங்கப்பூர்-சென்னை ஏர் இந்தியா பயணிகள் விமானம், சென்னையில் தரையிறங்க, 200 அடி உயரத்தில் தாழ்வாக பறந்தது, திடீரென மீண்டும் உயிரே எழும்பி, வானில் 3,500 அடி உயரம் சென்று, வானில் வட்டமடித்து பறந்து விட்டு, சுமார் 20 நிமிடங்கள் கழித்து, சென்னையில் மீண்டும் தரையிறங்கிய சம்பவம், விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விமானம் தரை இறங்கிய போது, தரைக்காற்று சாதகமான நிலையில் இல்லாததால், விமானம் தரையிறங்காமல், மீண்டும் வானில் பறந்து விட்டு,தரை இறங்கியது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகளுக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்று சென்னை விமான நிலையம் தகவல்.
சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானம், 186 பயணிகளுடன் இன்று காலை, 10.15 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக, தாழ்வாக பறந்து, விமான ஓடு பாதையை நெருங்கியது. ஓடுபாதையில் தரையிறங்குவதற்காக, 200 அடி உயரத்தில் மிகத் தாழ்வாக பறந்த விமானம், திடீரென மின்னல் வேகத்தில், உயரே எழும்பி, சுமார் 3,500 அடி உயரத்தில் வானில், வட்டமடித்து பறக்கத் தொடங்கியது. அதோடு அந்த விமானம், சுமார் 20 நிமிடங்கள், வானில் தொடர்ந்து வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தது. அதன் பின்பு காலை 10.37 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில் வந்து விமானம் தரையிறங்கியது.
இதைப்போல் ஏர் இந்தியா விமானம், தரை இறங்க வந்தது, திடீரென உயரே சென்று, வானில் பறந்து விட்டு, அதன் பின்பு தாமதமாக தரையிறங்கியது ஏன்? என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, அவர்கள் கூறியதாவது;
இந்த விமானம் தரை இறங்கும்போது, தரைக்காற்றின் வேகம் திடீரென அதிகரித்துள்ளது. அப்போது விமானம் சுமார், 200 அடி உயரத்தில் மிக தாழ்வாக பறந்து கொண்டு இருந்தது. தரைக்காற்று சாதகமாக இல்லாத நேரத்தில், விமானம் தரை இறங்கினால், ஓடுபாதையை சரியாக கனித்து, விமானத்தை இயக்க முடியாது என்பதால், தரையிறங்க வந்த விமானம், அடுத்த சில வினாடிகளில் சுதாகரித்துக் கொண்டு, மீண்டும் விமானத்தை வானில் பறக்கச் செய்துள்ளார். சில நிமிடங்கள் விமானம், வானில் பறந்துவிட்டு, அதன் பின்பு சரியான முறையில், ஓடு பாதையில் தரையிறங்கியது. இதனால் விமானத்திற்குள் இருந்த பயணிகளுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. விமானங்கள் தரையிறங்கும் போது, சரியான சூழ்நிலை அமையவில்லை என்றால், விமானங்கள் மீண்டும் வானில் பறந்து விட்டு, தரை இறங்குவது வழக்கமானது தான் என்று கூறுகின்றனர்.
ஆனாலும் சென்னை விமான நிலையத்தில், தரை இறங்க வந்த விமானம், திடீரென மீண்டும் வானில் பறந்து விட்டு, சுமார் 20 நிமிடங்கள் கழித்து, சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
                               
                  












              ; ?>)
; ?>)
; ?>)