புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் இந்திய இராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக பாஜக வடக்கு, தெற்கு ஒன்றியம் சார்பில் இந்திய ராணுவத்தினருக்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து தேசியக்கொடி ஏந்தி பேரணி நடைபெற்றது.
புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் கறம்பக்குடியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக கறம்பக்குடி பாரதிய ஜனதா கட்சி வடக்கு,தெற்கு ஒன்றியம் சார்பில் தேசியக்கொடி ஏந்தி பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியானது கறம்பக்குடி வடக்கு ஒன்றிய தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையிலும் தெற்கு ஒன்றிய தலைவர் ஐயப்பன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த பேரணியை முன்னாள் மாவட்ட தலைவர் விஜயகுமார் தொடங்கி வைத்தார்.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக மற்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை போற்றும் விதமாக கறம்பக்குடி வடக்கு தெரு முக்கத்திலிருந்து சீனி கடை முக்கம் வரை பாரதிய ஜனதா கட்சியினர் 100கும் மேற்பட்டோர் மூவர்ண கொடியான தேசிய கொடியை கைகளில் ஏந்தியவாறு ராணுவத்தினிற்கும் பாரத பிரதமருக்கும் வாழ்த்து கூறி கோஷமிட்டு பேரணியாக சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் கறம்பக்குடி வடக்கு தெற்கு ஒன்றியத்தினர், முன்னாள் மாவட்ட தலைவர்கள் ,மாவட்டத் துணைத் தலைவர்கள், மாவட்ட செயலாளர் உட்பட பலர் பங்கேற்றனர்.








