• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பட்டியல் இனத்து மக்களுக்கு எதிராக தாக்குதல்..,

ByS. SRIDHAR

May 27, 2025

2026 தேர்தலில் பட்டியல் இனத்து மக்களை யார் பாதுகாப்பாக இருப்பார்களோ அவர்களுடன் கூட்டணி அதிமுக காட்சி காலத்தில் பட்டியல் இனத்து மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை.

26 தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து சூழலுக்கு பொறுத்த வரை முடிவு எடுக்கப்படும்.

திமுக பாஜகவை எதிர்ப்பார்கள் அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது நேரடியாக பாஜக தலைவர்களை சந்தித்து அவர்களோடு சமரசம் செய்து கொள்வார்கள். இதுதான் திமுகவின் வாடிக்கை டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு யார் ஊழல் செய்திருந்தாலும் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். புதுக்கோட்டையில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் கே வி குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன் மூர்த்தி பேட்டி,

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஜாதி மோதல் தொடர்பாக மாவட்ட ஆட்சியரை புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் கே வி குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன் மூர்த்தி சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்.

அதில் பாதிக்கப்பட்ட பட்டியல் இனத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் அவர் முன் வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பூவை ஜெகன் மூர்த்தி தமிழகத்தில் பட்டியல் அனைத்து மக்கள் படிக்கவும் கூடாது. பொருளாதாரத்தில் முன்னேறவும் கூடாது என்ற ஒரு எண்ணத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் பட்டியல் இனத்து மக்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.

பட்டியல் இனத்து மக்களை ஏளனமாக பார்ப்பதும் அவர்களை அசிங்கப்படுத்துவதும் போன்ற நடவடிக்கைகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து தொடர்ந்து பல்வேறு நிலைகளிலே பட்டியலினத்து மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் இதுபோன்ற சாதிவன்முறைகள் கிடையாது. பட்டியல் இனத்து மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள்.

ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இத்தகைய சம்பவங்கள் நடைபெறுகிறது என்று சொன்னால் திமுகவில் உள்ள அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் ஜாதியை வளர்ப்பவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்பது தான் பொருளாகும்.

இத்தகைய போக்கை தமிழக முதல்வர் கண்டிக்க வேண்டும் கண்டிக்க வேண்டிய எண்ணம் முதல்வருக்கு இல்லை. இனியாவது தமிழக முதல்வர் இத்தகைய விஷயங்களில் கவனம் செலுத்தி இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோன்ற நடவடிக்கைகளில் முதல்வர் எடுக்காவிட்டால் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். தேவைப்பட்டால் முதல்வரை நான் சந்திப்பேன். திமுக அரசு பட்டியல் இனத்து மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

2026 தேர்தலில் பட்டியல் இனத்து மக்களுக்கு யார் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நாங்கள் நினைக்கிறோமோ அவர்களோடு தான் எங்கள் கூட்டணி வேங்கை வயல் வழக்கில் உண்மையான குற்றவாளிகளை தமிழக அரசு நேரடியாகவே தலையிட்டு காப்பாற்றி பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக ஆக்கியுள்ளனர். இது வாக்கு வங்கிக்காக செய்யப்பட்ட செயலாகத்தான் நான் பார்க்கிறேன்.

2021 தேர்தலில் நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் நின்று வெற்றி பெற்றோம். 2026 தேர்தலில் அன்று என்ன சூழ்நிலை உள்ளதோ அதைப் பொறுத்து நாங்கள் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவு செய்வோம்.

டாஸ்மாக் விவகாரம் குறித்தும் முதல்வர் டெல்லி பயணம் குறித்தும் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தவர் குப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்
யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்

திமுக பிஜேபியை எதிர்க்கும் அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்று வரும் போது பாஜக தலைவர்களை சந்தித்து சமாதானம் செய்து கொள்வார்கள் இது திமுகவின் வாடிக்கை
என்றார்.