• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

கோவில் திருவிழா ஒத்திவைப்பு..,

ByKalamegam Viswanathan

May 24, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேட்டு நீரேத்தான் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த துர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு திருவிழா கொண்டாடுவதில் அவ்வப்போது சிறு சிறு பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது.

பெரும்பாலான மக்கள் பழைய நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர். இந்நிலையில் சிலர் திருவிழா கொண்டாடும் நோக்கில் முன்னேற்பாடு பணிகளை செய்து வந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது மேலும் அவர்கள் பழைய நடைமுறையை பின்பற்றி ஊரில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக சாமி கும்பிட வேண்டும் என்று கிராம பொது மந்தை அருகே ஒன்று கூடிகண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து பொதுமக்கள், கோட்டாட்சியர் ஷாலினி, சமயநல்லூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், வாடிப்பட்டி வட்டாட்சியர் ராமச்சந்திரன், இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் ஜெயலட்சுமி, நிர்வாக அதிகாரி அங்கையர் கண்ணி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் காவல்துறையினர் முன்னிலையில் வாடிப்பட்டி தனியார் மஹாலில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட உடன்படிக்கையில் திருவிழா தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.