ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வீரேந்தர் சிங் 24, சேலம் செல்லிபாளையத்தை சேர்ந்த ஆனந்தகுமார் இருவரும் ஒரு காரில்,தடை செய்யப்பட்ட கணேஷ் மற்றும் கூல் லிப் போதை பொருட்களை சேலத்தில் இருந்து எட்டயபுரத்திற்கு செல்வதற்காக கடத்திச் சென்றனர்.
இந்த கார் நேற்று கரூர் மாவட்ட எல்லையான ஆண்டிப்பட்டி கோட்டை அருகே பஞ்சரானது.

பஞ்சர் ஒட்ட சென்ற ஆலமரத்துபட்டி கார்த்திகேயன் 39காரை பார்த்து சந்தேகம் அடைந்து போலீசுக்கு அளித்த தகவலின் பேரில், அரவக்குறிச்சி போலீசார் விரைந்து சென்றனர்.
அவர்களை பார்த்து வீரேந்தர் சிங், ஆனந்தகுமார் இருவரும் தப்பி ஓடினர்.
போலீசார் விரட்டி சென்று வீரேந்தர் சிங்கை கைது செய்து, காரில் கடத்தி வந்த ரூ1,88,112- மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.