• Wed. Sep 17th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

புதியதாக பொறுப்பேற்ற இன்ஸ்பெக்டர்..,

ByKalamegam Viswanathan

May 21, 2025

மதுரை மாவட்டம், சோழவந்தான் கிராமத்தை பூர்விகமாக கொண்டவர் P.அசோக்குமார். இவர் 2011-ம் ஆண்டு நேரடி சார்பு ஆய்வாளர் தேர்வில் வெற்றி பெற்று முதன்முதலாக விருதுநகர் மாவட்டம் வீரசோழன் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியில் சேர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி, இராஜபாளையம், விருதுநகர், மல்லாங்கிணறு, போலீஸ் பயிற்சி பள்ளி மதுரை, அ.முக்குளம் போன்ற காவல் நிலையங்களில் சார்பு ஆய்வாளராக தனது பணியை துவங்கி பல்வேறு சாதனைகள் படைத்து காவல் நிலையத்தை காவல் நிலையமாக இல்லாமல் அதனை முற்றிலும் மாற்றி பொதுமக்கள் யாரும் அச்சம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு வந்து செல்லும் விதமாக மாற்றம் செய்தார்.

இவர் செல்லும் காவல் நிலையம் அனைத்திலும் விழிப்புணர்வு வாசகங்கள், திருக்குறள் போன்றவற்றவைகளை சுவற்றில் எழுதியும், காவல் நிலையத்தில் மரக்கன்றுகள் வைத்து பராமரித்து பசுமையாக மாற்றியும் பல்வேறு சேவைகளை செய்து வந்தார்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் காவல் நிலையத்தில் சுற்றுப்புற சுவர்கள் கட்டப்பட்டு அதில் தமிழர்களின் பறைசாற்றும் ஜல்லிக்கட்டு ஓவியங்கள், தேசிய தலைவர்கள் படங்கள் ஓவியமாக வரைபட்டு விழிப்புணர்வு வாசகங்கள். மேலும் காவல் நிலையம் உட்புறம் உள்ள சுற்றுப்புற சுவர்களில் திருக்குறள் மற்றும் அதற்கான வசனங்களும் எழுதப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் தவறு செய்யும் பட்சத்தில் அவர்களை திருத்தும் விதமாக நூதன முறையில் தண்டனை வழங்குவதற்காக 10 முதல் 20 திருக்குறள்கள் ஒப்பிக்க வைத்து அவர்களை அனுப்பி வைத்து பல பேர்களை திருத்தியுள்ளார்.

மேலும் அனைவருக்கும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் காரியாபட்டி காவல் நிலையம் நுழைவு வாயிலில் திருவள்ளுவர் நூலகமும், மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் Dr.அப்துல்கலாம் நூலகமும் அமைக்கப்பட்டு அதில் போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள், சட்டம் சார்ந்த புத்தகங்கள், வரலாற்று புத்தகங்கள், தேசியத் தலைவர்கள் புத்தகங்கள், கவிதைகள், நாவல்கள் என பல்வேறு வகையான புத்தகங்கள் இந்த காவல் நிலையத்தில் உள்ள நூலகத்தில் இடம்பெற ஏற்பாடு செய்தார்.

காவல் நிலையம் உட்புறம் சுவர்கள் முழுவதும் ஆங்காங்கே விழிப்புணர்வு, தன்னம்பிக்கை வாசகங்கள், ஓவியங்கள் மூலம் பெயிண்டிங் வரையப்பட்டுள்ளது.

மேலும் காவல் நிலையத்தில் மனுதாரர்களுக்காக காத்திருப்பு அறை ஏற்பாடு செய்து அதில் சட்டம் சார்ந்து தெளிவு பெற விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் பொன்மொழிகள் இடம்பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் குழந்தைகளுக்காக டோரா புஜ்ஜி, சோட்டா பீம் போன்ற படங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் இவர் பணியாற்றிய காரியாபட்டி காவல் நிலையத்தின் செயல்பாடுகளான சட்டங்களை அமல்படுத்துதல், தடுத்தல், குற்றங்களை கண்டறிதல், மற்றும் விசாரணை செய்தல், சட்டம் ஒழுங்கை பராமரித்தல், அமைதியை நிலை நாட்டுதல், அவசர நிலைகளுக்கு பதிலளித்தல் மற்றும் பல சேவைகளை வழங்கி வருவதை பாராட்டி இந்திய தர கவுன்சில் நிறுவனம் ஐஎஸ்ஓ (ISO – 9001:2015) தர சான்றிதழ் வழங்கி கௌரவப்படுத்தியது.

இவ்வளவு பெருமைக்கு எல்லாம் சொந்தக்காரர் காரியாபட்டி காவல் நிலையத்தில் சட்டம், ஒழுங்கு சார்பு ஆய்வாளராக பணியாற்றிய திரு.P. அசோக்குமார் அவர்கள் தான். மேலும் இவரது பணியை பாராட்டும் விதமாக கடந்த வருடம் ஆகஸ்ட் – 15 – 2024 அன்று விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற 78-வது சுதந்திர தின விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெயசீலன் ஐ.ஏ.எஸ் காரியாபட்டி காவல் நிலைய சட்ட, ஒழுங்கு சார்பு ஆய்வாளராக இருந்த திரு.P.அசோக்குமார் அவர்களுக்கு விருது வழங்கி பாராட்டி கௌரவப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து காரியாபட்டி காவல் நிலையத்திற்கு திடீர் ஆய்வு பணிக்கு வருகை தந்த தமிழ்நாடு சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவசீர்வாதம் காவல் நிலைய பராமரிப்புகள் மற்றும் ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற்றதற்காக வெகுவாக பாராட்டினார்.

மேலும் மறைமுகமாக பல்வேறு தரப்பினருக்கு படிப்பு செலவுகளை ஏற்று படிக்க வைத்தல், ஆதரவற்றோர் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்தல், தாய், தந்தை இல்லாத குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகங்கள் வாங்க உதவி செய்தல் இதுபோன்று பல்வேறு பணிகளை காவல் பணியோடு சேர்த்து சமூகப் பணிகளையும் செய்து வருகிறார்.

இந்த நிலையில் காரியாபட்டி காவல் நிலையம் ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ் பெற்றதையொட்டி, அதற்காக சிறப்பாக பணியாற்றிய அப்போது காரியாபட்டி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றிய P.அசோக்குமார் அவர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் (DGP) திரு.சங்கர் ஜீவால் அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவப்படுத்தினார்.

மேலும் இவர் 14 ஆண்டுகள் சார்பு ஆய்வாளராக பணியாற்றிய பல்வேறு காவல் நிலையத்தில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டியதற்கும், குற்ற சம்பவங்களை தடுத்ததற்காகவும், குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை துரிதமாக கைது செய்ததை பாராட்டும் விதமாக பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் இவரை வெகுவாக பாராட்டி சான்றிதழ்கள் மட்டும் கேடயங்கள் வழங்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அனைத்து தரப்பு மக்களிடம் நல்ல அணுகு முறையில் இருந்து குற்ற சம்பவங்களை குறைத்தும், பள்ளி கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று மாணவ மாணவியர்களுக்கு அவர்களுக்கு தேவையான அறிவுரை மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியதற்காக பல்வேறு தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் மூலம் பல்வேறு பாராட்டுகள் பெற்று சான்றிதழ்கள், கேடயங்கள் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் காவல்துறையில் சார்பு ஆய்வாளராக பணியாற்றிய P.அசோக்குமார் அவர்கள் தற்போது காவல் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று தனது முதல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பணியை மேற்கு மண்டலம் போத்தனூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பொறுப்பேற்று துவங்கியுள்ளார். புதியதாக பொறுப்பேற்ற போத்தனூர் இன்ஸ்பெக்டர் திரு.அசோக்குமார் அவர்களுக்கு காவல்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.