கோத்தகிரி நகர் பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, முதல்வர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பி.எம்.சி.சி அணி சாம்பியன் பங்கேற்று விளையாடின.
கோத்தகிரியில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவிளான மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த கிரிக்கெட் போட்டி தொடரை திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் மணிகண்டராஜ், மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் விளையாட்டு போட்டிகளில் இளைஞர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்ற வகையில் ஏற்பாடு செய்திருந்தார். இறுதி போட்டிக்கு விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில துணை செயலாளர், தலைமை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாநில செயலாளர் பி.கே.பாபு, விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா முன்னிலை வகித்தனர்.
இறுதி போட்டியை கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன், விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட அமைப்பாளர் ஆல்வின் துவக்கி வைத்தனர். கடந்த மூன்று மாதங்களாக மாவட்டத்தில் உள்ள தலைசிறந்த 64 அணிகள் பங்கேற்று விளையாடின. நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் தலைசிறந்த அணிகளான பிஎம்சிசி மற்றும் கெரடா மட்டம் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விளையாடின. இதில் முதலாவதாக பேட்டிங்கை தேர்வு செய்த பிஎம்சிசி அணியினர் 177 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் 178 ரன்கள் இலக்காக கொண்டு இரண்டாவது பேட்டிங் செய்த கெரடா மட்டம் அணியினர் 20 ஓவர் முடிவில் 126 ரன்கள் மட்டும் எடுத்து இரண்டாவது இடத்தை பிடித்தனர். பிஎம்சிசி அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றனர். ஆட்டநாயகன், தொடர் ஆட்ட நாயகன் பிஎம்சிசி அணியின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் முருகன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த இறுதி போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல் பரிசை பி.கே.பாபு, இரண்டாவது பரிசை வாசிம்ராஜா, மூன்றாம் பரிசை நெல்லை கண்ணன் ஆகியோர் வழங்கினார்.