• Thu. Aug 6th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

தெற்கெல்லை தியாகியை நலம் விசாரித்த தொல்திருமாவளவன்.

நாகர்கோவிலில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் தெற்கெல்லை தியாகியை நேரில் பார்த்து தொல்திருமாவளவன் நலம் விசாரித்தார்.

உடல்நல குறைவால் கடந்த 4 மாதங்களாக நாகர்கோவிலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மொழிப்போர் தெற்கெல்லை விடுதலைப் போராட்ட தியாகி கொடிக்கால் செல்லப்பா (எ) ஷேக் அப்துல்லா அவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். உடன் மாவட்ட செயலாளர் காலித் மற்றும் கட்சித் தோழர்கள், பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.