விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காமராஜர் திருமண மண்டபத்தில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் பொது செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி 71 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, விருதுநகர் மாவட்ட கழகம் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமை விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே டி ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு துவங்கி வைத்தார்.

இந்த ரத்ததான முகாமில் 300-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர் மாவட்டம் முழுவதிலும் சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர் ரத்ததான முகாமை துவங்கி வைத்து சிறப்புரையாற்றிய முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தேசத்தின் பக்தனாகவும் தேசத்தின் பிள்ளையாகவும் திகழ்பவர் எடப்பாடி பழனிச்சாமி அவரின் 71 வது பிறந்த நாள் விழாவில் இன்று நாம் செய்யும் ரத்ததான முகாம் நாட்டுக்கு தேவையானதாக உள்ளது.
தற்போது இந்தியா பாகிஸ்தான் போர் நடந்து வரும் நிலையில் நாம் செய்யும் ரத்ததான முகாம் நாட்டில் போராடிவரும் ராணுவ வீரர்களுக்கும் போரில் காயம் அடைந்தவர்களுக்கும் நமது இராஜபாளையம் பகுதியில் மருத்துவமனைகளில் விபத்து மற்றும் அறுவை சிகிச்சை அனுமதிக்கப்படுபவர்களுக்கும் தேவைப்படும். ஆகையால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் நாட்டின் தேவை அறிந்து ரத்ததானம் செய்து வருகின்றனர்.
இந்த விழா ஏற்பாடுகளை செய்த மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எம் என் கிருஷ்ணராஜ் இராஜபாளையம் தெற்கு நகர செயலாளர் பரமசிவம் வடக்கு நகர செயலாளர் துரைமுருகேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளே பாராட்டுவதாகவும் பேசினார் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களின் தேவை அறிந்து கொடுக்கின்ற கட்சி நாம் அனைவரும் மக்கள் தேவைக்காக பாடுபட வேண்டும் என சிறப்பு உரையாற்றினார்.