• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

62 அடி உயரம் உள்ள சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை..,

ByM.JEEVANANTHAM

May 10, 2025

ஆசியாவிlலேயே உயரமான 62 அடி உயரம் உள்ள சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை, ரஷ்யா ஜெர்மனி கஜகஸ்தான் உள்ளிட்ட பத்து நாடுகளை சார்ந்த 40 வெளிநாட்டவர்கள் ஓம் நமச்சிவாய என்ற ஐந்து எழுத்து மந்திரத்தை ஓதி, மனமுருக சுவாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பெருஞ்சேரி கிராமத்தில், தாருகாவனத்து சித்தர் பீடம் அமைந்துள்ளது. புராண காலத்தில் தாருகா வனத்து முனிவர்கள் ஏவிய யானையை சிவபெருமான் அழித்து ஆடையாக உடுத்துக் கொண்டதாக வழுவூர் தலபுராணம் தெரிவிக்கின்றது. புகழ் பெற்ற இந்த ஊரில் 62 அடி உயரம் 62 அடி நீளம் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் தாருகா வனத்து சித்தர் பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் புராணப்பிரதிஷ்டை விழா நாளை நடைபெறுகிறது. சித்தர் பீடத்தில் நிர்வாகி தட்சிணாமூர்த்தி தலைமையில் நாளை நடைபெறவுள்ள பிராண பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு வாஸ்து சாந்தி பூஜைகள் ஹோமங்கள் இரண்டு கால யாகசாலை பூஜைகள் இன்று துவங்கின. இதனை ஒட்டி ரஷ்யாவில் இருந்து வருகை தந்துள்ள யூலியா என்ற பெண்மணி ஒருங்கிணைப்பில், கஜகஸ்தான் லித்திவியா, ஜெர்மன் உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த 40 வெளிநாட்டவர்கள் யாகசாலை பூஜையில் பங்கெடுத்துள்ளனர்.

இன்று சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு பிரம்மாண்ட நந்தி முன்பு ஓம் நமச்சிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தை பக்தி பெருக்குடன் ஓதினர். தொடர்ந்து கைலாய வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. இதற்கு தகுந்தவாறு பக்தி பரவசத்துடன் நடன அசைவுகளை கொடுத்தவாறு சுவாமி தரிசனம் செய்த காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. தங்களுக்கு ஆன்மீக உணர்வை மிகுதியாக ஏற்பட்டுள்ளதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர்.