மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ளது மன்னம் பந்தல். இங்கு ஆண்டுதோறும் வட்டார போக்குவரத்து அதிகாரிகளால் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படும்.

இன்று 241 -க்கு மேற்பட்ட பள்ளி வாகனங்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சி ஸ்ரீகாந்த், மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வட்டார போக்குவரத்து அலுவலர் கதிர்வேல், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் ராம்குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் கூட்டாய்வு செய்தனர். அதில் 14-வாகனங்களுக்கு தற்காலிக பதிவு நீக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக தீயணைப்பு துறை மூலம் வாகன ஓட்டிகளுக்கு தீ பிடித்தால் எப்படி அனைப்பது. காயமுற்றவர்களை எப்படி மீட்பது என்பது பற்றி செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த கூட்டாய்வில் 400க்கு மேற்பட்ட பள்ளி வாகன ஓட்டிகள் மற்றும் நடத்துனர்கள் கலந்து கொண்டனர்