• Sat. Jun 27th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை

Byமதி

Dec 5, 2021

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா தீவில் உள்ள செமரு எரிமலை கடந்த சில தினங்களாக சீற்றத்துடன் காணப்பட்டது. இந்தநிலையில் நேற்று முதல் கடும் சீற்றத்துடன் நெருப்புக் குழம்புகள் வெளியேறுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மற்றும் சாம்பல் படர்ந்ததால் கருப்பாக காட்சியளிக்கிறது.

எரிமலையில் இருந்து வெளியேறிய நெருப்புக் குழம்புகள் அருகில் உள்ள கிராமங்களை பாதிக்க தொடங்கியுள்ளது. இதனால் ஒரு பாலம் முற்றிலும் சேதமடைந்துவிட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் பீதியடைந்து தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறினர்.எரிமலையை சுற்றி 5 கிமீ சுற்றளவுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.