• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

Byமதி

Dec 5, 2021

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், 13வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் மொத்தம் 60 ஆயிரம் இடங்களில் நடைபெற்றது.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களும், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களை கடந்துள்ள நபர்களும் அலட்சியமாக இல்லாமல் இந்தத் தடுப்பூசி முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டது. அதன்படி பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்,

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் 1,600 முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது.

இன்று நடைபெற்ற 13வது மெகா தடுப்பூசி முகாமில் 20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி உள்ளதாகவும் கூறி உள்ளது.