• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரியில் தகவல் தொழில் நுட்பவியல் துறையில் பயிற்சி மையம் துவங்கப்படவுள்ளது – மனோ தங்கராஜ்

தமிழகத்தில் ஓர் ஆண்டில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு தகவல் தொழில் நுட்பவியல் துறையில் பயிற்சி அளிக்கவும் அதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் விரைவில் பயிற்சி மையம் துவங்க உள்ளதாகவும் அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோயிலில் பேட்டி அளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் தங்கராஜ் கலந்துகொண்டு பேசினார். அதன் பின்பு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், போதையிலிருந்து மக்களை மீட்பதற்கான பணிகள் முழுவதும் நடைபெற வேண்டும் எனவும் டாஸ்மாக் கடைகளை மூடுவதால் மட்டும் மட்டும் போதை விவகாரத்தை ஒழித்துவிட முடியாது எனவும், இவ்விவகாரம் மனநலம் சார்ந்த பிரச்சனை என்பதால் அதன் மீது தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார். தமிழகத்தில் தகவல் தொழில் நுட்பவியல் துறை சார்ந்த கல்வி பயின்ற இளைஞர்கள் ஒரு லட்சம் பேருக்கு ஓராண்டில் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு மையம் விரைவில் துவங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.