• Fri. Jan 2nd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு பொன்விழா..!!

ByT. Vinoth Narayanan

May 5, 2025

தியாகராஜா மேல்நிலைப் பள்ளியில் 1997 ஆம் ஆண்டு 10ம் வகுப்பு படித்தவர்களும் 1999ம் ஆண்டு12 ஆம் வகுப்பு படித்தவர்களும் இணைந்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பு பொன்விழா நிகழ்வை நடத்தினர்.

நிகழ்விற்கு மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தார்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சீருடை வழங்கப்பட்டிருந்தது. ஆசிரியப் பெருமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் தங்கள் பள்ளியின் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

ஆசிரியர் பெருமக்கள் மாணவ, மாணவியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார்கள் என அனைவருக்கும் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மாணவர்கள் சார்பாக பள்ளியின் கணினி ஆய்வகத்திற்கு 2 கணிப்பொறிகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. அனைவருக்கும் மதிய உணவும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முனைவர் பா. வேலுமணி, வெ. பார்த்திபன், கோவிந்தராஜ், ஆறுமுகம், நாகேந்திரன்,
மாரியம்மாள், சித்ரா வள்ளி மற்றும் பல ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.