• Fri. Mar 20th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

மதுபோதை மறுவாழ்வுமையத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உபகரணங்கள்

ByM.I.MOHAMMED FAROOK

May 5, 2025

மது போதை மறுவாழ்வு மையத்திற்கு தொலைக்காட்சி புத்தகங்கள் மற்றும் விளையாட்டு பொருட்களை ஜி.என்.எஸ்.ராஜசேகரன் வழங்கினார்.

காரைக்கால் மையப் பகுதியில் காந்திஜி ஒருங்கிணைந்த மதுபோதை மறுவாழ்வுமையம் இயங்கி வருகிறது. இதில் மது போதைக்கு அடிமையாகி பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அதில் இருந்து மீண்டு வருவதற்காக இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு பொழுது போக்கிற்காக மற்றும் நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்வதற்காகவும் தொலைக்காட்சி பெட்டி புத்தகங்கள் மற்றும் மனதை ஒருநிலைப்படுத்தும் விளையாட்டு உபகரணங்களான கேரம் போர்டு செஸ் போர்டு மற்றும் யோகா செய்ய பயன்படுத்தும் தரை விரிப்பு ஆபத்து காலத்தில் தீ விபத்து ஏற்பட்டால் அதை அடைப்பதற்கான தீயணைப்பான் போன்ற பல்வேறு உபயோகமான பொருட்களை வழங்குமாறு ஜி.என்.எஸ். அறக்கட்டளை நிறுவனர் மற்றும் கால்ஸ் குழும இயக்குனர் ஜி.என்.எஸ். ராஜசேகரனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கோரிக்கையை ஏற்று ஜி.என்.எஸ்.ராஜசேகரன் காந்திஜி ஒருங்கிணைந்த மதுபோதை மறுவாழ்வுமையத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தொலைக்காட்சி நாட்டின் அரசியல் வரலாறு ஆன்மீகம் கதை கட்டுரை தினசரி நிகழ்வு சம்பந்தப்பட்ட புத்தகங்கள் மற்றும் மனதை ஒருநிலைப்படுத்தும் விளையாட்டு உபகரணங்களை இன்று வழங்கினார். அதைப் பெற்றுக் கொண்ட காந்திஜி மது போதை மறுவாழ்வு மைய நிர்வாகிகள் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.