புதுச்சேரியில் 12 தேர்வு மையங்களில் தொடங்கிய நீட் தேர்வில் மொத்தம் 5230 மாணவர்கள் தேர்வு எழுதினர். வழக்கம்போல் தேர்வறையில் செல்போன், கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு இன்று நடைபெற்றது. புதுச்சேரியில் 12 மையங்களில் நடைபெறும் தேர்வில் 5230 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இந்த நிலையில் பாரதிதாசன் மகளிர் கல்லூரிக்கு வருகை தரும் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை கட்டாயம் கொண்டுவர வேண்டும். வழக்கம்போல் தேர்வறையில் செல்போன், கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டுச் செல்ல அனுமதியில்லை. முழுக்கை சட்டை, பெல்ட், தோடு, மூக்குத்தி ஆகியவை அணியக்கூடாது. தலைமுடியில் ஜடை பின்னல் போடக்கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் உட்பட இதர வழிமுறைகளையும் மாணவ, மாணவிகள் தவறாது பின்பற்ற வேண்டும் என காவல்துறை மூலம் ஒலிபெருக்கி மூலமாகஅறிவுறுத்தினர். தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பின்பு மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.













; ?>)
; ?>)
; ?>)