• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

திமுக சார்பில் இலவச நீர் மோர் பந்தல் திறப்பு

ByB. Sakthivel

May 5, 2025

புதுச்சேரி மாநில திமுக சார்பில் இலவச நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதனை திமுக மாநில அமைப்பாளர் சிவா திறந்து வைத்து பொதுமக்களுக்கு இலவசமாக நீர் மோர் வழங்கினார்.

புதுச்சேரியில் அக்கினி வெயில் தொடங்கியுள்ள நிலையில் பகல் நேரங்களில் கடுமையான வெயிலுடன் அனல் காற்று வீசுகிறது. நேற்று 100.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. இது போன்ற கடுமையான வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில், நீர், மோர் பந்தல் திறக்க வேண்டும் என்று திமுக தலைமை அறிவுறுத்தி இருந்தது.

அதன்படி படி திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால் ஏற்பாட்டின் பேரில் மாநில திமுக சார்பில் இலவச நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. அண்ணா சாலையில் நடந்த திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திமுக மாநில அமைப்பாளர் சிவா, நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இலவசமாக நீர் மோர் வழங்கினர்.

இதில் இளநீர், நுங்கு, வெள்ளரிக்காய், தர்பூசணி, தர்பூசணி ஜூஸ், கிர்ணி பழம், நீர் மோர், மற்றும் கரும்பு சாறு உள்ளிட்ட பல்வேறு வகையான உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பொருட்கள் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

இதனை அண்ணா சாலையில் சென்ற பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கி பருகினர். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில திமுகவைச் சேர்ந்த மாநில தொகுதி மற்றும் அனைத்து பிரிவு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.