• Sun. Sep 20th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

தொழிலாளி ரமேஷ்-க்கு, கருவூல அதிகாரிகள் நன்றி, பாரட்டுகள்

ByB. Sakthivel

May 3, 2025

புதுச்சேரியில் தனியார் தொழிற்சாலை ஊழியரின் வங்கி கணக்கில் தவறுதலாக 3 லட்சம் செலுத்தப்பட்டது. பணத்தை திரும்பி செலுத்திய புதுச்சேரி தொழிலாளியின் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

புதுச்சேரி, தர்மாபுரியை சேர்ந்தவர் ரமேஷ் என்பவர் சேதராப்பட்டு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மாதம் ரூ.15ஆயிரம் ஊதியத்திற்கு பணிபுரிந்து வருகிறார்.
மேலும் சமீபத்தில் இவரது மனைவி உயிரிழந்த நிலையில் புதுவை பல்கலைக் கழகத்தில் முதலாம் ஆண்டு பயிலும் அவரது மகனுடன் வசித்து வருகிறார்.
இதனிடையே கடந்த29-ஆம் தேதி மாலை ரமேஷின் செல்போனுக்கு அவரது கணக்கில் ரூ.3,02,029 செலுத்தப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ் மறுநாள் காலை கணக்கு வைத்துள்ள இந்தியன் வங்கியின் கிளை மேலாளரை நேரில் சென்று தொடர்பு கொண்டு பணம் செலுத்தப்பட்டது தொடர்பாக தகவல் தெரிவித்தார். உடனடியாக அவரது வங்கி கணக்கை ஆய்வு செய்ததில் அரசின் கருவூலத்தில் இருந்து பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்ததை தொடர்ந்து, அங்கு சென்ற ரமேஷ் கருவூல அதிகாரியிடம், தகவல் தெரிவித்ததை அடுத்து அவர்கள் ஆய்வு செய்தபோது, பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் ரமேஷ் என்பவருக்கு செலுத்த வேண்டிய தொகையை தவறுதலாக தொழிலாளி ரமேஷின் கணக்கில் செலுத்தப்ட்டது தெரியவந்தது.

பின்னர் வங்கியில் தகவல் தெரிவிக்கப்ட்ட நிலையில், தொழிலாளி ரமேஷின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட தொகை மீண்டும் அரசின் கருவூலத்திற்கு செலுத்தப்பட்டு பின்னர் ஒப்பந்ததாரர் ரமேஷின் கணக்கில் செலுத்தப்பட்டது.
வறுமையில் கஷ்டபட்டாலும் தவறுதலாக வங்கி கணக்கில் செலுத்திய ரூ.3 லட்சம் தொகையை உடனடியாக நேர்மையான முறையில் வங்கியில் திரும்பி செலுத்திய ரமேஷின் செயலுக்கு வங்கி மற்றும் கருவூல அதிகாரிகள் நன்றியையும், பாரட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.