• Mon. Aug 3rd, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

அலட்சிய போக்குடன் செயல்படும் தனியார் வங்கி..,

ByKalamegam Viswanathan

May 3, 2025

மதுரை பழங்காநத்தம் மெயின் ரோட்டில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் இன்று காலை வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க சென்றுள்ளார்கள் ஆனால் அதில் பணம் இல்லை.

இதனால் மதுரை காளவாசல் பகுதியில் உள்ள ஏடிஎம் அப்படி இல்லை என்றால் மதுரை மெயின் பிரான்சுக்கு தான் செல்ல வேண்டும் மற்ற வங்கிகளில் பணம் எடுத்தால் ஒரு முனையும் பணம் எடுத்தால் கணக்கிலிருந்து 25 ரூபாய் பிளஸ் ஜிஎஸ்டி எழுப்புகிறார்கள் இந்த நிலையில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக வாடிக்கையாளர் ஒருவர் அதே வங்கிக்கு பணம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது அவரிடம் ஏடிஎம் கார்டு உள்ளது.

டிரான்ஸ்பர் பண்ணுங்கள் என்றாலும் செய்ய மாட்டேன் என்று சொல்லி மறுத்து விட்டார்கள், சரி ஏடிஎம்மில் பணம் நிரப்புங்கள் என்றால் என்னிடம் பணம் இல்லை எனவும் காத்திருங்கள் எனவும் சொல்லி காத்திருக்க வைத்துள்ளார்கள் என வாடிக்கையாளர்கள் புலம்புகிறார்கள். சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக பணம் இல்லாததால் வாடிக்கையாளர் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

ஒரு ஏடிஎம்மில் பணம் இல்லை என்றால் அதற்கான செலவை இவர்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அறிவுறுத்தி உள்ளது. அதைக் கேட்டால் மேலாளர் எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது என சொல்கிறார். சுமார் இரண்டரை மணி நேரத்துக்கு மேல் தற்பொழுதுதான் பணம் நிரப்பி கொண்டு இருக்கிறார்கள்.