புதுச்சேரி மாநிலம் தாளக்குப்பம் ஆனந்தாநகரை சேர்ந்தவர் பாபு (வயது 49).இவர் தவளகுப்பம் நான்கு முனை சந்திப்பில் ரமணா ஆயில் கடை வைத்துள்ளார்.

மேலும் தவளகுப்பம் வியாபாரி சங்கத்தில் பொருளாளராக இருந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று அந்த பகுதியில் நடந்த கட்சி விழாவில் கட்சி கொடிகளை சாலை ஓரத்தில் கடை எதிரில் நட்டு உள்ளனர். அதற்கு பாபு தனது கடைக்கு எதிரில் வாடிக்கையாளர்கள் வருவதற்கு, ஆயில் கேன் இறக்கி ஏற்றுவதற்கு இடையூறாக இருப்பதாக கூறி வழியிருந்த ஒரு கொடியை அகற்றி மாற்று இடத்தில் வைத்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த மணவெளி தொகுதி திமுக செயலாளர் ராஜாராமன் என்பவர், பிற்பகல் 3 மணி அளவில் பாபுவின் கடைக்கு நேரில் வந்து தகாத வார்த்தைகளால் திட்டி தர குறைவாக பேசினார். மேலும் கொலை மிரட்டல் விடுத்து வெறித்தனமான முறையில் தாக்கி அங்கிருந்து சென்றார். இது குறித்து தவளகுப்பம் போலீசில் பாபு புகார் அளித்தார்.
அந்த புகார் அடிப்படையில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சண்முகசத்தியா கொலை மிட்டல் உள்ளிட்ட பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் வியாபாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்துள்ளது.