• Mon. Feb 16th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா..,

ByRadhakrishnan Thangaraj

Apr 29, 2025

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியில் அமைந்துள்ள கள்ளர் குல தொண்டைமான் சமுதாயத்திற்கு பார்த்தியப்பட்ட ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் சித்திரை பொங்கல் திருவிழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதைத் தொடர்ந்து விளக்கு பூஜை பூஜை பெட்டி அழைப்பு முளைப்பாரி எடுத்து வீதி உலா என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருவிழாக்கள் நடைபெற்றது இதில் ஒன்பதாம் நாள் திரு நாளான இன்று மூன்று பக்தர்கள் தங்கள் முதுகில் கொக்கியால் குத்தி வாகனத்தில் கட்டப்பட்ட அந்தரத்தில் தொங்கியவாறு பறவை காவடி எடுத்தனர். 50க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்தும் ஆன்கள் அழகு குத்தியும் இராஜபாளையம் தென்காசி சாலை அமைந்துள்ள சொக்கர் கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்து ஆவாரம்பட்டி பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை ஊர் தலைவர் பூமாரியப்பன் செயலாளர் முருகேசன் பொருளாளர் ஞானகுரு இளைஞர் அணி சமுதாய பெரியோர்கள் செய்திருந்தனர். இந்த விழாவில் திருச்சி தேனி விருதுநகர் சத்திரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.