• Tue. Sep 30th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

அரசு மருத்துவமனையில் மருத்துவதுறை தரச்சான்று ஆய்வு…

ByRadhakrishnan Thangaraj

Apr 28, 2025

ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் மாநில மருத்துவதுறை தரச்சான்று குழு ஆய்வு செய்து வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை பொதுமக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை ஆற்றி வருகிறது. இதன் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமல்லாது பல வெளியூர்களை சேர்ந்த பொதுமக்கள் இங்கு வந்து தங்கள் நோய்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக இங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மருத்துவமனைக்கும் முறை உள்கட்ட அமைப்பு வசதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்த மத்திய, மாநில அரசுகளின் மருத்துவகுழு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பல விருதுகள் வழங்கி உள்ளது. கடந்த ஆண்டு மத்திய அரசின் காயகல்ப விருது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 2024 ஆண்டு தமிழக அரசின் மருத்துவத்துறை சார்பில் என்குவாஷ் விருது வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு தரச் சான்று விருது வழங்குவதற்கான ஆய்வு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் நேற்று தொடங்கி மூன்று நாட்கள் மாநில அரசின் தரச் சான்று குழு ஆய்வு செய்தது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு தலைமை மருத்துவர் முத்துக்குமரன் காந்தி, செவிலியர்கள் விசாலாட்சி, விக்னேஷ் ஆகியோர் மருத்துவ ஆய்வகம் பிரசவ வார்டு ஆண், பெண் குழந்தைகள் வார்டு எக்ஸ்ரே இசிஜி எடுக்கும் இடம் மருந்து மாத்திரை வழங்கும் இடம் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வின் போது ஸ்ரீ வில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் காளிராஜ் என்குவாஷ் கண்காணிப்பு அதிகாரி டாக்டர் சுரேஷ் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் செவிலியர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர். ஆய்வு அறிக்கை மாநில அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.