• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள்

ByAnandakumar

Apr 26, 2025

கரூரில் சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கரூர் மாநகரின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி சௌந்தரநாயகி உடனுறை ஆகிய கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இன்று சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தி எம்பெருமானுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், திருமஞ்சனம், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் செய்யப்பட்டு தொடர்ந்து வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு, அருகம்புல் பல்வேறு மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு நட்சத்திர ஆரத்தி, கற்பூர ஆரத்தி, மகாதீபாரதனைகள் காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.