• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

ஒமைக்ரான் தொற்றிலிருந்து தப்பிக்குமா தமிழ்நாடு…

Byகாயத்ரி

Dec 3, 2021

2019-ம் ஆண்டு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே டெல்டா, பீட்டா, காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது.

தற்போது ஒமைக்ரான் என்ற பெயரால் உருமாற்றம் அடைந்துள்ளது.இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஒமைக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது.இதற்கிடையில், தற்போது கொரோனா வைரஸ் மேலும் உருமாற்றமடைந்துள்ளது. ‘ஒமிக்ரான்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய கொரோனா வேரியண்ட் ஒமைக்ரான் வைரஸ், இந்தியாவிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பதிவாகி வருகிறது. இதையடுத்து, தமிழகத்திலும் ஒமைக்ரான் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தென் ஆப்ரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த 66 மற்றும் 46 வயதான ஆண்கள் 2 பேருக்கு முதலில் கோவிட் உறுதியானது. தொடர்ந்து நடந்த பகுத்தாய்வு பரிசோதனையில் இருவரும் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் திருச்சி வந்தவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. தொற்று உறுதியான தஞ்சை நபருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உள்ளதா என கண்டறிய மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சிங்கப்பூரில் ஓமிக்ரான் கொரோனா பரவிய நிலையில் தஞ்சை நபரின் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன. கொரோனா உறுதியான நபருக்கு திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இத்தகைய வீரியமிக்க ஒமைக்ரானை எதிர்க்க தமிழகம் தயாராக உள்ளதா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்…

இதுவரை நவ.19 லிருந்து டிச.2 வரை புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை +10,372ஆக உள்ளது.மேலும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 168 ஆக உள்ளது.

மக்கள் வெளியே செல்வதில் கோவிட்-19 காரணமாக என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என அறிந்துகொள்ளுங்கள்…

தமிழ்நாட்டில் சில்லறை மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் 2021 நவம்பர் மாதம் 28ஆம் தேதிக்கான தரவுகள்.அன்று சில்லறை விற்பனை இடங்களில் மட்டும் வழக்கத்தை விட -19% மாறுபட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளான மளிகை மற்றும் மருந்து பொருட்கள் வாங்கும் இடங்களில் +21% அதிகரித்துள்ளது.பொழுதுபோக்கு இடங்களான பூங்காக்களில் -7% மாறுப்பட்டுள்ளது.போக்குவரத்து நிலையமான பேருந்து நிறுத்தத்தில் வழக்கத்தைவிட -2% மாறுப்பட்டுள்ளது.மக்கள் அதிகம் செலவிடும் இடமான வேலை பார்க்கும் பணியிடங்களில் வழக்கத்தைவிட+14% ஆக அதிகரித்துள்ளது.இதை தவிர்த்து வீட்டில் இருப்போர் எண்ணிக்கை என்னவென்று பார்த்தால் வழக்கத்தைவிட +10% மாறுபட்டுள்ளது.

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

தமிழகத்தில் கொரோனாவால் புதியதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 715 ஆக உள்ளது.இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,28,350 ஆக உள்ளது.

மக்கள் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரம்…

இந்தியாவிற்கு வழங்கப்பட்ட மொத்த டோஸ்களின் எண்ணிக்கை 1,25,58,66,411 மற்றும் 1 நாளில் புதிதாக வழங்கப்பட்ட டோஸ்களின் எண்ணிக்கை 1,03,49,235 ஆக உள்ளது.இந்தியாவில் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டோரின் எண்ணிக்கை 46,13,38,098 இதன் சதவிகிதம் 33.9% ஆக கணக்கெடுப்பில் தெரிகிறது.

இந்த சூழலில் ஒமைக்ரான் உருமாறிய கொரோனா அதிக வீரியம் மிக்கதாக இருப்பதால் இதன் பரவல் சற்று அதிகமாகவே உள்ளது.இருப்பினும் தமிழக அரசு இந்த தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகிறது.வருகிற நாட்களில் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் மக்கள் வீட்டிற்குள் முடங்கும் அபாயம் இருக்கிறது.இதனால் மக்களின் இயல்பு வாழ்கை முற்றிலுமாக முடங்க வாய்ப்புள்ளது.மேலும், இதற்கான நடவடிக்கையாக மீண்டும் ஊரடங்கு ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.எனவே, மக்களின் நலத்தை பொருட்ப்படுத்தி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பு…