சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே பேரூராட்சி அந்தஸ்தை கொண்ட கண்டனூர், விவசாயிகள் அதிகம் வசிக்கும் பகுதியாக இருந்து வருகிறது.

கண்டனூர் பகுதி விவசாயிகளுக்கு நீர் ஆதாரமாக இருந்து வரும் வலசன்
கண்மாய், ஆக்கிரமிப்புகளாலும், நீர் வரத்துக்கால்வாய் சீரமைக்கப்படாதாலும் கடந்த 15 வருடங்களாக நீர் ஆதாரமின்றி வறண்டு போனது. இதனால் விவசாயம் செய்ய வழியில்லாமல் விவசாயிகள் வேறு, வேறு ஊர்களுக்கு வேலைக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்நிலையில், தற்போது தொடர்ச்சியாக பெய்துவரும் வடகிழக்குப் பருவ மழையினால் மழைநீர் ஊருக்குள் புகுந்து பெரும் சிரமத்திற்கு ஆளான ஊர்மக்கள், ஒன்றுகூடி வரத்து கால்வாய்களை தாங்களாகவே முன்வந்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் வரத்து கால்வாயில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் எந்த தடையும் இன்றி கண்மாய்க்கு செல்ல வழியும் ஏற்படுத்தினர்.

ஊர்மக்களின் ஒற்றுமை முயற்சிக்கு கைமேல் பலனாக கண்மாய் நிரம்பத் தொடங்கிய நிலையில் இனிமேல் தடையில்லாமல் விவசாயம் செய்யலாம் என்று மகிழ்ச்சி கூறினர். மேலும், கண்டலூர் பேரூராட்சி நிர்வாகமும் ஆண்டுதோறும் வரத்து கால்வாய்களை தூர்வாரி தங்களது பங்களிப்பையும் செய்து விவசாயம் காக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்துள்ளனர்.