• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

டாஸ்மாக் செயல்படும் நேரம் மாற்றம் – தமிழக அரசு

Byமதி

Dec 3, 2021

டாஸ்மாக் மதுக்கடைகள், மதுக்கூடங்கள் இனி மதியம் 12 மணி முதல் இரவு 10 மணிவரை செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த கடந்த ஆண்டு டாஸ்மாக் மதுக்கடைகள் பகல் 12 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை செயல்பட்டு வந்தது. இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, டாஸ்மாக் கடைகள் வருகின்ற 5ம் தேதி முதல் “பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி” வரை செயல்படும் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.