நானே ராஜா… எம்.பி சொன்னா குழாய் போடணுமா? இருந்த குழாயையும் புடுங்கி எறிய சொன்ன பழனிசெட்டிபட்டி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தியின் அடாவடித்தனத்தால் திமுகவினரும், அப்பகுதி பொதுமக்களும் கொதித்து போய் உள்ளனர்.
தேனி பழனிசெட்டிபட்டி பிரச்னை விவகாரம்… தூங்குகிறதா மாவட்ட நிர்வாகம்? ஆகிய தலைப்புகளில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நமது “அரசியல் டுடே” இணையதளங்களில் தொடர்ச்சியாக தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன்சக்கரவர்த்தியின் அடாவடி பற்றி செய்திகளாகவும், வீடியோக்களாகவும் வெளியிட்டிருந்தோம். நமது அரசியல் டுடே இணையதள செய்தியைக் கண்ட தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் கடந்த 29.03.25 அன்று பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பிரச்னைக்குரிய இடமான சுகதேவ் தெருவில் ஆய்வு செய்தார். அப்போது அந்த தெருவில் பாதிவரை சிமென்ட் ரோடு போட்டு நிறுத்தியதும், தெருக்குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளான பேரூராட்சிகளின் இணை இயக்குனர் கிறிஸ்டோபர்தாஸ், பழனிசெட்டிபட்டி பேரூராட்சியின் செயல் அலுவலர் ஜெர்ஸி ரோஸ்லின் அன்புராணி ஆகியோரை நேரில் வரவழைத்து, மக்களுக்காகத்தான் அரசாங்கம். நீங்க எல்லாம் அதிகாரிகள் என்ற போர்வையில யாருக்கு வேலை பார்க்கிறீங்க-? உங்கள மாதிரி ஆளுகளால கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயர்…மக்களுக்காக வேலை பாருங்க. இரண்டு தினங்களுக்குள்ள துண்டிக்கப்பட்ட பைப்பும் போட்டுருக்கனும். இந்தப் பகுதியில ரோடும் போட்டு முடிச்சிருக்கனும் என அதிகாரிகளை எச்சரித்து விட்டு சென்றார். ஆனா எம்.பி தங்கதமிழ்ச்செல்வன், அதிகாரிகளை எச்சரித்து விட்டு சென்று ஒரு வாரத்திற்கு மேலாகியும் இன்று வரை சொல்லிச் சென்ற வேலை எதுவும் நடைபெறவில்லை என்று தேனி பழனிசெட்டிபட்டி யிலிருந்து நம் அலுவலகத்திற்கு அவலக்குரலாக தகவல் வர உடனே அங்கு ஆஜரானோம்.
தேனி எம்.பி யின் ஆய்வும், அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்தும் பேசிய வழக்கறிஞர் கண்ணதாசன் ..,
கண்ணதாசன்
“எம்.பி வந்து சம்மந்தப்பட்ட இடத்தை நேரில்பார்த்ததும், ஆஹா.. எம்பியே நேர்ல வந்து பாத்து சொல்லீட்டார்ல.. ரெண்டுநாள்ல ரோடும் வந்துரும், கட் பண்ணுன குழாயும் வந்துரும்னு சந்தோஷப்பட்டோம்.. ஆனா எதுவும் நடக்கல.எங்க ஊர் பொறுத்த அளவில் சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி வைத்தது தான் சட்டம். எம்.பி குழாய்க்கு கனெக்ஷன் குடுக்கச் சொன்னதால இப்ப அந்த குழாயை சேர்மன் உத்தரவில் பேரூராட்சி ஊழியர்கள் பிடுங்கி எடுத்துச் சென்று விட்டார்கள். எடுத்து செல்லுறப்ப கேட்டால் சேர்மன் உத்தரவு குழாயை எடுத்துட்டு மட்டும் வரச் சொன்னாரு …வேறு எதுவும் எங்களுக்கு தெரியாது! எதுவா இருந்தாலும் சேர்மன் கிட்ட கேட்டுக்கங்க என்று சொல்லிட்டு போயிட்டாங்க … உடனே சேர்மன் கிட்ட போய் கேட்ட.., “எம்பி கிட்ட சொல்லீட்டீங்கள்ல.. வேலை நடக்கும் போய்ட்டு வாங்க எல்லோரும் என மூஞ்சில அடிக்கிற மாதிரி சொல்லிட்டாரு”. எங்க ஊரை பொறுத்தவரை இங்கு நானேராஜா, நானே மந்திரிங்கிறது சேர்மன் மிதுன் சக்கரவர்த்திதான். இவரை பகைத்துக்கொள்ள பயந்து அதிகாரிகளும் மௌனமாய் இருக்கிறார்கள். எம்பி என்ன? யார் வந்து சொன்னாலும் இவரை கேட்கப்போவதில்லை, இது எங்கள் தலையெழுத்து.. ஆண்டவரிடமும் சொல்லிவிட்டோம்… ஆள்பவர்களிடமும் சொல்லிவிட்டோம்…இனி இவர்களுக்கு எதிராக ஊரே ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்த வேண்டியது தான் பாக்கி” என்றார் கண்ணதாசன் வேதனையாக .
செல்வராஜ்
மேலும் இது குறித்து பழனிச்செட்டிபட்டி திமுக பேரூர்செயலாளர் செல்வராஜ் இடம் கேட்ட போது..,
“சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி செய்யும் அடாவடிகள் குறித்து கட்சி மேலிடத்திலும் தெரியப்படுத்தி உள்ளோம். தேனி கலெக்டர் கிட்டயும் புகார் கொடுத்துள்ளோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எங்க அண்ணன் எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் நேரில் வந்து பிரச்சனைக்குரிய இடத்தை நேரடியாக பார்வையிட்டு சென்றார்கள். பேரூராட்சியின் ஏடி, செயல் அலுவலர் போன்றவர்கள் ஓய்வு பெறும் நிலையில் இருப்பதால் அவர்களை கோர்ட்டு, கேஸ் என இழுத்தடிப்பேன் என்று மிதுன் சக்கரவர்த்தி மிரட்டுவதால் அவர்கள் சேர்மன் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள். பொதுமக்களுக்கு இவ்வளவு அக்கிரமங்கள், இடையூறுகள் செய்யும் மிதுன் சக்கரவர்த்தி அதிகாரத்தை தட்டி கேட்க நாதி இல்லை. அதிகாரிகளும், அலுவலர்களும் சேர்மனுக்கு பயத்தால சப்போர்ட்டாக இருக்கிறாங்க. இணைப்பு துண்டிக்கப்பட்ட தெருக் குழாய்க்கு இரண்டு நாளில் இணைப்பு வழங்க எங்க அண்ணன் எம்.பி உத்தரவிட்டு போன மறுநாளே, தெருக்குழாய் இருந்த அடையாளமே தெரியாமல் பிடுங்கி எடுத்துச் சென்றார்கள்.. இங்கு எம்.பி பேச்சுக்கு மரியாதை இல்லை.எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் கூஜா.., நான் தா ராஜா என ஊருக்குள் எங்க கட்சிக்காரங்க கிட்டேயே பேசி வராரு மிதுன் சக்கரவர்த்தி.மேலும் 8வது வார்டுல குறிப்பிட்டு ஒரு தெருவே குறி வச்சு ஆக்கிரமிப்பு இருப்பதா உருவாக்குன புகார்தாரர் வேற யாருமில்லை சேர்மன் ஒட வலது கை மாமா இளையராஜா தான் இந்த கொடுமையை எங்க போய் சொல்ல ஊருகே தெரியும். நானே நொந்து போய் இருக்கிறேன்” என்றார் வேதனையாக.
இவர்களது குற்றச்சாட்டுகள் குறித்து தேனி பழனிசெட்டிபட்டியின் சேர்மன் மிதுன் சக்கரவர்த்தியை தொடர்பு கொண்டோம்.., நம் தொடர்பு தொடர்ந்து துண்டிக்கப்படவே
கிறிஸ்டோபர் தாஸ்
மேலும் இது குறித்து, தேனி மாவட்டத்தின் பேரூராட்சிகளின் இணை இயக்குநர் கிறிஸ்டோபர் தாஸ்யை தொடர்பு கொண்டு பேசினோம்..,
“பழனிசெட்டிபட்டி விவகாரம் எனக்கு ஒரே தலைவலியா இருக்கு.நான் சேர்மன் சொல்றத கேக்குறதா? எம்.பி சொல்றத கேக்குறதா?நான் லீவு போட்டு போக போறேன்” என்றார் படபடப்பாக.
இந்த பிரச்சனையை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முடிவெடுத்து இது குறித்து தேனி நாடாளுமன்ற தொகுதி எம்.பி.தங்க தமிழ்ச்செல்வன் அவர்களை தொடர்பு கொண்டு பேசினோம்..,
தங்க தமிழ்ச்செல்வன்
“சம்பந்தப்பட்ட அந்த தெருவுக்கு நானே நேரில் சென்று பார்வையிட்டேன். தெருவில் அரைகுறையாக போடப்பட்டிருந்த சிமெண்ட் சாலையையும், இணைப்பு துண்டிக்கப்பட்ட குடிநீர் குழாய்யையும் இரண்டு நாளில் சரி செய்து கொடுக்க வேண்டும் என அதிகாரியிடம் சொல்லிவிட்டு வந்தேன், இன்னும் வேலை செய்து முடிக்கவில்லையா ? என்றவரிடம்,
நீங்கள் சொல்லிவிட்டு வந்த பின்பு தான் அந்த தெருக்குடிநீர்குழாய் இருக்கிற இடமே தெரியாமல் பிடுங்கிக் எடுத்து சென்று விட்டார்கள் என்றதும், என்ன குழாய் பிடுங்கி எடுத்து சென்று விட்டார்களா?
“இப்ப நான் ஏடி கிட்ட பேசுறேன் என்றவர், இதற்கு சரியான தீர்வு கிடைக்காமல் விடமாட்டேன், இந்த பிரச்சனையை நானே களத்தில் இறங்கி முடித்து வைக்கிறேன்” என்று தங்க தமிழ்ச்செல்வன் உத்வேகத்துடன் பேசினார்.
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை
இந்த குறளை தேனி பழனிசெட்டிபட்டி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி படிக்க வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் கருத்து.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த அண்ணா நகரில் வள்ளி தேவசேனா சமேத சிவ சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சிவசுப்பிரமணியருக்கு பால், பன்னீர், இளநீர், உட்பட 11 வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை,, நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் துலுக்கன் குறிச்சி வாழை மர… Read more: சிவ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு..,
பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி, அரசுதிட்டங்களின் செயல்பாடுகள் குறித்து “நிறைந்தது மனம்” என்ற திட்டம் மூலம் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கள ஆய்வ செய்து வருகின்றார். அதனடிப்படையில் ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட அணைப்பாடி கிராமத்தில் மக்களோடு மக்களாக அமர்ந்து, அரசு திட்டங்கள் உங்கள் பகுதியில் முறையாக செயல்படுத்தப்படுகின்றதா, எந்த திட்டம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது என்பது குறித்து ஒவ்வொருவராக கேட்டறிந்தார். அப்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் பேசிய சுமார் 80 வயதான மூதாட்டி ஒருவர், தாயுமானவர் திட்டமும்,… Read more: தாயுமானவர் திட்டம் மக்களை தேடி மருத்துவத் திட்டம்..,
சிவகாசி தீயணைப்பு நிலையம் வாட்டர் மிஸ்ட் ஊர்தி குழுவினருடன் சிவகாசி அருகே உள்ள அனுப்பன்குளம் அரசு உயர் நிலைப் பள்ளியில் வட கிழக்கு பருவ மழை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இடி மின்னலில் இருந்து தற்காத்துகொள்வது பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம், தொம்பக்குளம் ரவி, நல்லக்காம்மாள்புரம் சுரேஷ் இருவரும் சாத்தூர், நடுவப்பட்டி அருகே கெங்கையம்மன் கோவிலுக்கு 31.10.25 அன்று திருமணத்திற்காக சென்றவர்கள். அதிகாலை இயற்கை உபாதைக்காக அருகிலுள்ள காட்டிற்கு சென்றபோது… அங்கு சட்டவிரோதமாக போடப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி உயிரிழந்து விட்டார்கள். உடல்களை அப்புறப்படுத்தி சுமார் முக்கால் கி. மீ தூரத்தில் உள்ள ஆற்றங்கரையில் புதைத்து இருக்கிறார்கள். தொம்பக்குளம் மக்கள் தினமும் 50கிமீ அலைந்து 5 நாட்களாக போராடினார்கள். காவல்துறை தீவிரமாக தொடர்ந்து தேடி… Read more: மின்வேலி அமைத்தவர் கொலைவழக்கு பதிவு செய்ய கோரிக்கை..,
கோவை நவ இந்தியா சாலையில் உள்ள எஸ்.என்.ஆர் அரங்கில் சிஐடியு 16-வது மாநில மாநாடு எழுச்சியுடன் தொடங்கியது. நவம்பர் 9-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.எஸ். சுப்பிரமணியன் செங்கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, மாநாட்டு ஸ்தூபிக்கு மலர் தூவி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட தொழிலாளர்கள் உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளின் நினைவு ஜோதி மாநாட்டு வளாகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முதல்நாள் நிகழ்வில், அகில… Read more: கோவையில் சிஐடியு 16-வது மாநில மாநாடு..,
கோவை சட்ட கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் சரவணாதுரை தலைமை தாங்கினார். ஆர்பாட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் ஐ. லீலாவதி பேசியதாவது ” தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை ,சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது இவர்(ஸ்டாலின்) ஏன் இன்னும் பதவியில் இருக்கிறார்… Read more: பா.ஜ.க ஆர்ப்பாட்டத்துக்கு போலிஸ் எதிர்ப்பு..,
கோவையில் பெண்ணிடம் ஆன்லைன் மூலம் ரூபாய் 10 லட்சம் மோசடி செய்த தம்பதி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறும்போது: கோவை சரவணம்பட்டியில் தனியார் நிறுவனத்தை நடத்தி வந்த ஒரு பெண்ணுக்கு செல்போன் குறுந்தகவல் வந்தது. பங்கு சந்தையில் அதிக லாபம் பெற்று தருவதாகவும், முதலீடு செய்யுமாறும் அதில் தெரிவித்தனர். இதனை பார்த்து தொடர்பு கொண்ட கோவை பெண்ணிடம் தாங்கள் கொடுக்கும் வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்புமாறு… Read more: தம்பதி உட்பட 3 பேர் கைது !!!
கோவை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கோவை குற்றாலம் விளங்குகிறது. இங்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். இந்நிலையில் தொடர் மழை காரணமாக மூடப்பட்ட கோவை குற்றாலம் மீண்டும் நாளை திறக்கப்படுவதாக வனத்துறை அறிவிப்பு. கோவை குற்றாலத்தில் அவ்வப் போது வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். இதை வனத்துறையினர் கண்காணித்து, நீர்வரத்து அதிகரித்து இருந்தால், சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பார்கள். அதன்படி கடந்த… Read more: கோவை குற்றாலம் மீண்டும் நாளை முதல் திறப்பு..,
சர்வதேச சுற்றுலா பகுதியான கன்னியாகுமரியில். சுற்றுலா பயணிகள் அதிகமாக கூடும் பகுதியான திருவேணி சங்கமம் பகுதியில். தேவி பகவதியம்மன் கோவில் பின் பக்கமிருந்து, மூன்று கடல்கள் சந்திக்கும் பகுதி வரையிலான நடைபாதையை,ஒற்றையடி பாதை போன்ற நிலைக்கு மாற்றி. சுற்றுலா பயணிகள் நடந்து செல்லமுடியாது,ஒரு செயற்கையான மக்கள் நெரிசலை உருவாக்கி வைத்தது நடைபாதை வியாபாரிகளின் ஆக்கிரமிப்பால், பாதை ஆக்கிரமிப்பு மட்டும் அல்லாது வியாபாரிகள் ஒருவருக்கு ஒருவர் சண்டையில் வெளிப்படும் அநாகரீக வார்த்தைகள் காதில் பட்டு காது கூச்சம் அடைய… Read more: நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்..,
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 3 ஆயிரத்து 117 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு நிலை அலுவலரும், அவருடன் இரண்டு தன்னார்வலர்களும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். அந்த வகையில் கோவை மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 9,351 பேர் சிறப்பு தீவிர கணக்கெடுப்பு பணிகளிலும் 650 பேர் சட்டசபை தொகுதி வாரியாக அலுவல் பணிகளிலும் 10,000 பேர் தீவிர திருத்தப் பணிகளில் ஈடுபட்டு… Read more: சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்..,