• Fri. Sep 19th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் தரப்படவில்லை முதல்வர் மு.க.ஸ்டாலின் !!!

BySeenu

Apr 6, 2025

பெண்கள் என்றாலே சாதனை தான், சாதனை என்றாலே பெண்கள் தான் – என்னைப் பொறுத்த வரை இந்த ஆட்சியை மகளிருக்கான ஆட்சி தான் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும் – தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் !!!

கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற வள்ளி கும்மி நடத்தினதில் கின்னஸ் சாதனை படைத்த பெண்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது :-

கலைக் குழு சார்பில், வள்ளிக் – கும்மியில் பங்கேற்ற 16 ஆயிரம் பெண்களுக்கு, வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்கள் என்றாலே சாதனை தான், சாதனை என்றாலே பெண்கள் தான் . என்னைப் பொறுத்த வரை இந்த ஆட்சியை மகளிருக்கான ஆட்சி தான் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில், பாராட்டு விழாவினை நடைபெறும் இந்த வள்ளிக்குமே கின்னஸ் சாதனை விழாவில், கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கின்னஸ் சாதனையில் 16 ஆயிரம் பெண்கள் கும்மியாடியது பெரிய சாதனையாக அமைந்துள்ளது.

சட்டமன்றத்திலையும் மக்கள் மன்றத்துலையும், மக்களுக்காக போராடியும் வாதாடியும், இந்த மேற்கு மண்டலத்தில் எங்களுடைய கவனத்தைப் பெற்றவர், அன்பிற்குரிய ஈஸ்வரன் என்ன பேசினாலும் எங்கு சென்று பேசினாலும், அதில் மேற்கு மண்டல மக்களின் நன்மை அடங்கி இருக்கும். தேர்தலில் வெற்றி பெற்று கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் போது நிருபர்கள் என்னிடம் ஆட்சிக்கு வரப் போகிறீர்கள், தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன சொல்ல போகிறீர்கள் என கேட்டனர். நான் எதையும் சொல்ல விரும்பவில்லை எனக் கூறி ஒன்றே ஒன்றை மட்டும் கூறினேன்

என்னை நம்பி வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்கு செலுத்தாதவர்களுக்கும் இந்த ஆட்சி நடைபெறும் எனக் கூறினேன். வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும். வாக்களிக்க தவறியவர்கள் இவருக்காக வாக்கு செலுத்தாமல் போனோம் என, வருத்தப்பட வேண்டும். அந்த நிலையில் நிச்சயமாக, எங்கள் ஆட்சி இருக்கும் என உறுதி கூறினேன். அந்த வகையில் தான் இந்த மேற்கு மண்டலத்திற்கும் அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறது. தொடர்ந்து 2024 நாடாளுமன்ற தேர்தலில், தி.மு.க வுக்கு அமோகமான வெற்றியை முழுமையான வெற்றி. 40 க்கு 40 கிடைத்து இருக்கிறது என்றால் அதை இந்த ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ்.

அதேபோல் வருகிற 2026 ஆம் ஆண்டு நிச்சயம் சொல்கிறேன் நாம்தான் வெற்றிபெற போகிறோம். ஆனால் மோடி தலைமையில் இருக்கக் கூடிய ஒன்றிய அரசு, நமது ஆட்சியைப் போல் இல்லாமல், வாக்களிக்காத தமிழ்நாட்டை வஞ்சித்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுடைய வஞ்சனையையும் கடந்து, தமிழ்நாடு வளர்ச்சியில் எல்லா துறைகளிலும் முன்னிலையில் இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு முறையான நிதிகளை வழங்கி தமிழ்நாட்டிற்கு நன்மையை செய்து கொடுத்தால் உலக அளவில் நாம் தான் முன்னிலையில் இருப்போம்.

இன்று காலையில் கூட தொகுதி மறு சீரமைப்பில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பாதிக்கப்படாது என்ற உறுதியை பிரதமர் வழங்க வேண்டும் என்று நான் கோரிக்கை வைத்தேன். தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து இது பற்றி விவாதித்து இருக்கிறோம். அதற்குப் பிறகு வட மாநிலங்கள் மட்டுமில்லாமல் வட மாநிலத்தில் இருந்து ஏழு தலைவர்கள், கொண்ட கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றிய பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு இருக்கிறோம். ஆனால் இதுவரை ஒப்புதல் வரவில்லை.

ஆனால் அவருக்கு இடையில் தமிழ்நாட்டிற்கு வருகிறீர்கள், தமிழ்நாட்டிற்கு வரக் கூடிய நீங்கள் அதை தெளிவுபடுத்த வேண்டும், என்று நான் கோரிக்கை வைத்தேன். ஆனால் மக்களின் முக்கியமான பிரச்சனைகளுக்கு பதில் சொல்லாமல் தவிர்க்கிற வகையில், சென்று உள்ளார். அப்படி நம்மளுடைய கோரிக்கைகளை தவிர்க்கிறவர்களுக்கு அவர்களை நிச்சயம் தவிர்ப்போம் என்று தமிழக மக்கள் பதில் கொடுக்க வேண்டும்.

இந்த வள்ளி கும்மி கலை வளர்ச்சிக்கும் தமிழக பண்பாட்டு இருக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும், தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற உணர்வோடு, இரு விளங்கிட வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். எந்த ஒரு கலையும் சமூக முன்னேற்றத்திற்கும், ஒழுக்கத்திற்கும் முதன்மையாக அமைய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என கூறினார்.

https://we.tl/t-mkLz3B9GXx