கோவையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்றும் இன்றும் மாலை வேளையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை கோவை மாநகரின் ஒரு சில பகுதிகளில் மட்டும் கன மழை பெய்தது.

குறிப்பாக பீளமேடு, ரயில் நிலையம், டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. அதில் அரசு மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் வடிகாலில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக தண்ணீர் மருத்துவமனை வார்டுகளுக்குள் புகுந்ததால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
அங்கிருந்த நோயாளிகளின் அறை முழுவதும் மழை வெள்ளம் குளம் போல் தேங்கியால் கீழே இறங்க முடியாமல் நோயாளிகள் தவித்த சூழலில் மருத்துவமனை ஊழியர்கள் மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரமாக அங்கு தண்ணீர் தேங்கியதால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.