

கோவை கொடிசியா சாலை அருகே செயல்படும் ராக்ஸ் பள்ளிக்கூடத்தின் ராக்ஸ் பேட்மிண்டன் அகாடெமி, கோபிசந்த் வழிகாட்டுதலில் ‘பேட்மிண்டன் குருகுல்’ குறித்தான செய்தியாளர் சந்திப்பு ராக்ஸ் பள்ளிக்கூடம் வளாகத்தில் நடைபெற்றது.
இதில் இந்த பள்ளியின் நிறுவனர் சுவேதா கிருஷ்ணமூர்த்தி, கோபிசந்த், ‘பேட்மிண்டன் குருகுல்’ பயிற்சி பள்ளியின் நிறுவனர் சுப்ரியா தேவ்கன் மற்றும் ராக்ஸ் பேட்மிண்டன் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் மகேந்திரன் ராதா கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ராக்ஸ் பள்ளிக்கூடத்தின் நிறுவனர் சுவேதா கிருஷ்ணமூர்த்தி..,
சுமார் தற்போது வரை 40 மாணவர்கள் விளையாட்டு வீரருக்கான பயிற்சியையும், 100 மாணவர்கள் துவக்கநிலை முதல் இடைநிலை அளவில் பயிற்சியையும் பெற்று வருகின்றனர் என கூறினார்.
“பேட்மிண்டன் குருகுல்-உடன் ஒப்பந்தம் செய்து கொண்ட பின்னர், 7 முதல் 8 மாணவர்கள் எங்கள் அகாடமியில் இருந்து ஜூனியர் மற்றும் சீனியர் நிலை போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்துள்ளனர். 8 முதல் 9 வீரர்கள் தேசிய மற்றும் ஆசிய அளவிலான 17 மற்றும் 19 வயதுக்கு கீழானவர்களுக்கான போட்டிகளில் முக்கிய இடங்களை பெற்றுள்ளனர்,” என தெரிவித்தார்.


