• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மியான்மரில் தொடரும் சோகம் : பலி எண்ணிக்கை அதிகரிப்பு

Byவிஷா

Apr 4, 2025

கடந்த மாதம் 29ஆம் தேதியன்று மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,145 ஆக உயர்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மரில், கடந்த மாதம் 29ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், மியான்மரின் பெரும்பாலான நகரங்கள் உருக்குலைந்து போயின. வானுயர கட்டடங்கள் சரிந்து விழுந்ததில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
நிலநடுக்கம் ஏற்பட்டு ஒருவாரம் ஆன நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டதால், மீட்புப் பணிகளை மேற்கொள்வது சவாலாக உள்ளது. இந்த நிலையில், நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,145 ஆக அதிகரித்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இது குறித்து தலைநகரில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் மவுங் மவுங் ஓன் தெரிவித்திருப்பதாவது..,
இந்த நிலநடுக்கத்தில் ‘4,589 மக்கள் காயமடைந்துள்ளனர். 221 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து, உணவு மற்றும் தங்குமிடங்களை, அரசுடன் இணைந்து பல தனியார் தொண்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன,’
இவ்வாறு அவர் கூறினார்.