• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்தம்…

Byகாயத்ரி

Dec 1, 2021

வங்கி ஊழியர்கள் வருகிற 16 மற்றும் 17ஆம் தேதிகளில், தொடர்ந்து 2 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

2 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பான, வங்கிகள் சட்ட திருத்த மசோதா 2021, நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 16 மற்றும் 17ஆம் தேதிகளில், தொடர்ந்து 2 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதுமட்டுமின்றி, தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று ஈடுபட சங்கங்களின் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

சமீபமாக மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள சில பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கி வருகிறது. அந்த வகையில் இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.