• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கோவை ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்..,

BySeenu

Apr 1, 2025

இதற்காக, சிறப்பு போலீசார் ரயில்களில் பொதுமக்களோடு, பொது மக்களாக பயணம் செய்து கண்காணித்து வருகிறார்கள்.  இந்த நிலையில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் வடமாநிலத்தில் இருந்து கோவை வழியாக கேரளா மாநிலம் செல்லும் ரயிலில் ஒவ்வொரு பெட்டியாக சென்று பயணிகள் வைத்து இருக்கும் உடைமைகளை சோதனை செய்தனர். 

அப்போது திருப்பூரில் இருந்து ரயில் கோவையை நெருங்கிக் கொண்டு இருந்தது. ரயில் பெட்டியில் முன்பதிவு பயணிகள் பெட்டியில் போலீசார் சோதனை நடத்திக் கொண்டே எஞ்சின் அருகில் உள்ள பொது பெட்டிக்கு சென்றனர். 

அப்போது பயணிகளின் உடைமைகளை சோதனை செய்த போது ஒரே ஒரு மூட்டை மட்டும் அனாதையாக கிடந்தது. இது யாருடைய மூட்டை என்று போலீசார் அங்கு இருந்த பயணிகளிடம் கேட்டனர். அப்போது அது தங்களுடையது இல்லை என்று அனைவரும் கூறினர். 

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மூட்டையை திறந்து பார்த்த போது அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 8 கிலோ கஞ்சா அதில் இருந்தது.
அதற்குள் ரயில் கோவை ஜங்ஷன் ரயில் நிலையத்தை வந்து அடைந்தது. கஞ்சா மூட்டையை கேரளாவிற்கு கொண்டு செல்வதற்காக எடுத்து வந்த வாலிபர் போலீசார் சோதனை நடந்து கொண்டு இருப்பதை பார்த்ததும் அதை அப்படியே போட்டு விட்டு பயணிகள் கூட்டத்தில் கலந்து வெளியேறி விட்டது தெரியவந்தது.  ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அந்த கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.