வெயில் வெளுத்தெடுத்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 5-ம் தேதி மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில மாவட்டங்களில் வெயிலின் அளவு 2 டிகிரி அதிகரித்து வருகிறது. சராசரி வெயிலை விட 100 டிகிரிக்கு மேல் பல்வேறு மாவட்டங்களில் வெயில் மண்டை பிளந்து வருகிறது. இந்த நிலையில், வெயிலுக்கு ஆறுதல் அளிப்பது போல, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால், வானிலை மாறுபாடுகள் காணப்படலாம்.. இதனால் ஏப்ரல் 5-ம் தேதி வரை தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக, கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், தென்காசி, விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை இந்த பகுதிகளில் ஏற்படும். வளிமண்டல மாற்றங்கள் மற்றும் காற்றழுத்த மாற்றங்கள் காரணமாக இந்த மழை உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.







; ?>)
; ?>)
; ?>)