அரசியல் டுடே செய்தி எதிரொலி:
‘கொத்தடிமையா இரு.. மிரட்டும் பேரூராட்சி தலைவர்! பாதிக்கப்பட்டவர் கலெக்டரிடம் தஞ்சம்’
“உங்களுக்கெல்லாம் நல்ல தண்ணி வேணுமாக்கும்” – தேனி பழனிசெட்டிபட்டி சேர்மன் மிதுன்சக்கரவர்த்தி!,
தேனி பழனிசெட்டிபட்டி பிரச்னை விவகாரம்…தூங்குகிறதா மாவட்ட நிர்வாகம்’ ஆகிய தலைப்புகளில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு நமது அரசியல் டுடே இணையதளங்களில் தொடர்ச்சியாக தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன்சக்கரவர்த்தி செய்த லீலைகளைப் பற்றி இணையதளத்தில் செய்திகளாகவும், வீடியோக்களாகவும் வெளியிட்டிருந்தோம். நமது அரசியல் டுடே இணையதள செய்தியைக் கண்ட தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் திடீரென தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பிரச்னைக்குரிய இடமான சுகதேவ் தெருவில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளான பேரூராட்சிகளின் இணை இயக்குனர் கிறிஸ்டோபர், பழனிசெட்டிபட்டி பேரூராட்சியின் செயல் அலுவலர் ஜெர்ஸிரோஸ்லின்அன்புராணி, பேரூராட்சிகளின் ஊழியர்களை அந்த இடத்திற்கே நேரில் வரவழைத்து விசாரணை செய்தார் எம்.பி.தங்கதமிழ்ச்செல்வன். இந்த விசாரணையில் பேரூராட்சிகளின் இணை இயக்குனர் கிறிஸ்டோபர், செயல் அலுவலர் ஜெர்ஸிரோஸ்லின் அன்புராணி இருவரும் வினோத்தான் சார் ஆக்கிரமிப்பு பண்ணி வச்சிருக்காங்க, அதனாலதான் இவ்வளவு பிரச்னையே என்று. முரண்பட்ட கருத்துக்களாகவே கூறினர்.அதற்கு எம்.பி தங்க தமிழ்செல்வன், இந்த வீதியே குறுகலான வீதி. அப்ப நீங்க எல்லாத்துக்கும் நோட்டீஸ் கொடுக்கணும். நீங்கதான் அதிகாரிகள் என்ற போர்வையில யாருக்கு வேலை பார்க்கிறீங்க. மக்களுக்குத்தானே. மக்களை உங்களுக்குப் புரிஞ்சிக்க தெரியல. திமுக அரச கெட்ட பேராக்கணும்னே செய்றீங்களா. ஒருபோதும் நடத்த விடமாட்டான் இந்த எம்.பி தங்கதமிழ்ச்செல்வன். பி ஹேர்புல் என்று எச்சரிக்கை விடுத்தார். சரி நான் தெரியாம கேக்கிறேன், இங்க இருக்கிற நல்ல தண்ணீர் குழாயை யாரு பிடுங்கினது என்று கேட்க திணறிப் போன இணை இயக்குநரும், செயல் அலுவலரும், அது வந்து என்று வார்த்தைகளால் திணறினர்.

இதெல்லாம் யாருடைய வேலம்மா, மக்களுக்காக வேலை பாருங்க. குழாய யாரு பிடுங்கினதுன்னு பார்த்து சம்மந்தப்பட்டவங்க மேல புகார் கொடுத்து எப்ஐஆர் காப்பியை எனக்கு வாட்ஸப்புல அனுப்புங்கம்மா, மக்களுக்காக வேல பாருங்க. இரண்டு தினங்களுக்குள்ள பைப்பும் போட்டுருக்கனும். இந்தப் பகுதியில ரோடு போட்டு முடிச்சிருக்கனும். அரசியல் டுடே இணையதளத்துல தொடர்ச்சியா செய்தி வருதுல்ல. அத பார்த்து கூட உங்களுக்குத் தெரியலையா? என்று தங்கதமிழ்செல்வனுக்கான பாணியிலேயே அதிகாரிகளை வசை பாடி விட்டு பாதிக்கப்பட்ட வினோத் அவருடைய குடும்பத்தினரிடம், நீங்க தைரியமாக இருங்கப்பா, இந்த எம்.பி தங்கதமிழ்ச்செல்வன் இருக்கேன். உண்மை என்னைக்குமே தோற்காதுப்பா என்று தைரியம் சொல்லி விட்டு தெம்பாக கிளம்பினார் எம்.பி. தங்கதமிழ்ச்செல்வன். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் நமது அரசியல் டுடே செய்தி நிறுவனத்திற்கும், எம்.பி.தங்கதமிழ்ச்செல்வனுக்கும், இந்தப் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்த மாவட்ட கலெக்டர் , மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோருக்கு மனதார நன்றிகளைத் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தை வைத்தாவது திருந்துவாரா பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன்சக்கரவர்த்தி என்று அப்பகுதி மக்கள் பேசினர்.
