• Wed. Oct 7th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

ரயில்வே மேம்பால பணிகள் முடிக்க எம்.எல்.ஏ தளவாய்சுந்தரம் வலியுறுத்தல்..,

நாகர்கோவில் ஒழுகினசேரியில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலம் மற்றும் இணைப்புச் சாலை பணிகளை காலதாமதம் செய்யாமல் விரைந்து முடிக்க மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என். தளவாய்சுந்தரம் கோரிக்கை.

குமரி மாவட்டத்தில் நான்கு வழி சாலை பணிகள் தொடங்கி ஆண்டுகள் பல கடந்தும். ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் காரணமாக பணிகள் நடைபெறுவது தடைப்பட்ட நிலையில். கடந்த ஓராண்டாக பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்.

பணிகள் தாமதம் ஆனதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு பாதிப்பு ஏற்படுவதால், பணிகளை போர்கால அடிப்படையில் நிறைவு செய்ய மத்திய ரயில்வே அமைச்சர் மற்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு, கன்னியாகுமரி சட்டமன்ற அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம் கடிதம் எழுதியுள்ளார்.