• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

வாக்கு வங்கி அரசியலுக்காக சமூகநீதி பேசக்கூடியவர் திருமாவளவன் – டாக்டர் சரவணன் பேட்டி

Byகுமார்

Nov 30, 2021

பாரதிய ஜனதா கட்சி சார்பில் மதுரை மாநகர் தலைவர் டாக்டர் சரவணன் தலைமையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க கோரியும், சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரிய மனித சங்கிலி போராட்டத்தை மதுரை பெரியார் அருகே உள்ள கட்டபொம்மன் சிலையிலிருந்து சேதுபதி பள்ளி வரை நடத்தினர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர்.சரவணன் கூறுகையில்,

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி பாரதிய ஜனதாக் கட்சியைச் சார்ந்த ஓபிசி, எஸ்சி வர்த்தகம் மகளிர் உள்ளிட்ட அணைகள் சார்பாக இன்று மனிதசங்கிலி போராட்டத்தை நடத்தினோம். வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயர்களிடம் ஏன் கேட்கிறாய் வரி என்று கேட்டதைப் போல நாங்கள் தற்போது பெட்ரோல் விலையை குறைக்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றோம்.

வாக்கு வங்கி அரசியலுக்காக சமூகநீதி பேசக்கூடிய ஏமாற்றும் இயக்கத்தைச் சேர்ந்தவர் திருமாவளவன் அவர் தனது தொண்டர்களை நடத்துவதை வைத்து அவரது சமூகநீதிக்கு எடுத்துக்காட்டு வெளிவந்துள்ளது.

கூட்டணியில் இருக்கக்கூடிய மதிமுக எந்த ஒரு போராட்டத்திலும் குரல் கொடுக்காது அதிமுகவுடன் இணைந்து விட்டது கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி யின் பணம் வாங்கிக்கொண்டு விலகிவிட்டது பாரதிய ஜனதா கட்சியை எதிர்க்கட்சியாக செயல்பட்டு மக்களுக்கு நன்மை செய்ய ஆக்கப்பூர்வமாக இதை எடுத்துச் செல்லும் தமிழக முதல்வர் இதனை கருத்தில் கொண்டு மக்கள் நலனுக்காக பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றார்.