• Sat. Dec 27th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

குடும்பத் தகராறு காரணமாக மருமகன் தம்பி மாமனாரை கத்தியால் வெட்டியதால் பரபரப்பு..,

ByArul Krishnan

Mar 24, 2025

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள பெருமூளை கிராமம் புது காலனியை சேர்ந்த எம்ஜிஆர் இவர் கூலி வேலை செய்துவருகிறார். இவருடைய மகள் சாரதி வயது 23 அதே தெருவை சேர்ந்த வேல்முருகன் மகன் அஜய் வயது 29 என்பவரை நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனால் இது வீட்டாருக்கும் கருத்து வேறுபாடு இறந்ததாக கூறப்படும், நிலையில் அஜய்,சாரதி இவர்களுக்கு கடந்த ஓராண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்து இறந்த நிலையில், அஜய் மற்றும் மனைவி, தம்பி ஆகியோருடன் சென்னையில் பத்து மாதமாக வேலைக்கு சென்று நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக அஜய் தம்பி அஜாக் என்கின்ற கௌதமன்வயது 26, என்பவன் தனது சொந்த ஊரான பெருமூளை கிராமத்திற்கு வந்திருந்தார்.

அப்பொழுது எம்ஜிஆர் வீட்டுக்கு முன்பாக,அஜாக்கும் தகராறு ஏற்பட்டது செய்த காரணமாக வாக்குவாதம் முற்றிய நிலையில் அஜாக் மறைத்து வைத்திருந்த கத்தி எடுத்து எம்ஜிஆரை கழுத்து மற்றும் மூக்கில் வெட்டி உள்ளார் , உடனே அருகில் இருந்தவர்கள் திட்டக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து இருந்த எம்ஜிஆரை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திட்டக்குடி போலீசார் அஜாக்கிடம் இருந்த கத்தியை கைப்பற்றி கைது செய்தனர்.இது சம்பவம் குறித்து போலீசார் குடும்பத் தகராறு காரணமா அல்லது வேறு எது காரணமா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப் பகலில் ஒருவரை கத்தியால் வெட்டிய சம்பவம் பரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.