• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க கோரி, காங்கிரசார் காத்திருப்பு போராட்டம்

ByB. Sakthivel

Mar 22, 2025

குடிநீர் மாசடைந்து வருவதால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க கோரி, புதுச்சேரி முத்தியால்பேட்டையில் காங்கிரசார் 24 மணி நேர காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி நகர பகுதியில் குடிநீர் உவர்ப்பு நீராக அரசால் விநியோகம் செய்யப்படுகிறது. முத்தியால்பேட்டையில் குடிநீர் சுகாதார மற்றும் குடிக்கும் தன்மையுடனும் இல்லை என புகார் எழுந்துள்ளது. இதனால் சுகாதாரமான குடிநீரை வீடுகளுக்கு வழங்கக் கோரி முத்தியால்பேட்டை காங்கிரஸ் சார்பில், மணிக்கூண்டு அருகே 24 மணி நேர காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.

அதன்படி தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் ஈரம் ராஜேந்திரன் தலைமையில், போராட்டத்தை இன்று தொடங்கினர். முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

முத்தியால்பேட்டை தொகுதியில் குடிநீர் பிரச்னை பெரும் பிரச்னையாக உள்ளது.
குடிநீரில் 500 டிடிஎஸ் உப்புத்தன்மை இருக்க வேண்டும். ஆனால் 2 ஆயிரத்து 400 ஆக உள்ளது. இந்தகுடிநீரை தொடர்ந்து குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, சில ஆண்டில் நீரழிவு நோய் ஏற்படும் என காங்கிரஸ் பொறுப்பாளர் ஈரம் ராஜேந்திரன் தெரிவித்தார்.