மதுரை அவனியாபுரம் சுற்றுச்சாலை-ஈச்சனேரி பகுதியில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத உடல், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தனிப்படை காவலரின் உடல் உறவினர்கள் அடையாளம் காட்டியதையடுத்து பிரேத பரிசோதனை நடைபெறுகிறது பெருங்குடி போலீஸார் விசாரணைமேற்கொண்டு வந்தனர்.
குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஆய்வாளர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைப்பு
CCTV காட்சிகள் செல்போன் சிக்னல்கள் போலீஸார் ஆய்வு.
மதுரை விமான நிலையம் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் அவனியாபுரம் – ஈச்சனேரி பகுதியில் நேற்று மதியம் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாதா வாலிபர் உடலை பெருங்குடி போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் எரிந்த நிலையில் உயிரிழந்த வாலிபர் தற்போது விருதுநகர் மாவட்டம் அழகாபுரி முக்குளத்தை சேர்ந்த மலையரசன் ( வயது 36, ) என்பதும். இவர் சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில் பணிபுரிந்த தனிப்படை காவலர் என்றும், இவரது மனைவி பாண்டி செல்வி கடந்த 1ஆம் தேதி வாகன விபத்தில் காயம் ஏற்பட்டு மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து காவலர் மலையரசன் சிந்தாமணி பகுதியில் உள்ள மருத்துவமனையில் மனைவி மரணம் குறித்த மருத்துவமனை ரசீது உள்ளிட்ட ஆவணங்களை வாங்குவதற்காக வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த மருத்துவமனையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஈச்சனேரி பகுதியில் பாதி எரிந்த நிலையில் மலையரசன் உயிரிழந்துள்ளார்.
இறந்த மலையரசனின் மனைவி பாண்டிச் செல்வியின் செல்போன் ரிங் ரோடு பகுதியில் உள்ள மசூதி அருகே சாலையோரமாக கிடந்துள்ளது இதனை எடுத்த ஈச்சனோடையை சேர்ந்த நபர் செல் போனை ஆன் செய்ததை தொடர்ந்து போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் இறந்தது மலையரசன் என்பதை உறுதி செய்ய உறவினர் no களிடம் போலீஸார் அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூடுதல் தகவல்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிரேத பரிசோதனை மையத்தில் பிறந்த மலையரசனின் தந்தை பிச்சை மற்றும் அவருடைய சகோதரி உறவினர்கள் மலையரசனின் உடலை அடையாளம் கண்டதையடுத்து தற்போது பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது.
பிரேத பரிசோதனை முடிந்ததற்கு பின் மலையரசனின் உடல் இறுதியஞ்சலி செலுத்த அவரது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் முக்குளத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.(மலையரசன் (36),
மனைவி பாண்டிச்செல்வி.
திருச்சூழி தாலுக்கா அழகாபுரி கிராமம் கொக்குளம்.இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.மேலும் கடந்த வாரம் ராமநாதபுரம் செல்லும் சாலையில் உள்ள மிளகனூர் அருகே மனைவி விபத்தில் சிக்கி 13 நாட்கள் சிகிச்சையிலிருந்து கடந்த வாரம் உயிரிழந்துள்ளார்.