பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 4.400 kg குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா பல்வேறு நடைவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
அதன்படி இன்று 18.03.2025 பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் காவல் சரகத்திற்குட்பட்ட நாரணமங்கலம் கிராமத்தில் தனிப்படையினர் நடத்திய சோதனையில் ஹரிஹரன் (50) த/பெ சிதம்பரம், நாரணமங்கலம் பெரம்பலூர் என்பவர் தனக்கு சொந்தமான மளிகை கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்த நிலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்து பாடாலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பாடாலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கொளஞ்சியப்பன் மேற்படி எதிரி மீது வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து விமல் பாக்கு (52 பண்டல் – 3.900 kg) 2. V1-பான் மசாலா (52 பண்டல் – 500 கிராம்) மொத்தம் – 4.400 கிலோ* ஆகிய குட்கா பொருட்களை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.