மதுரை அவனியாபுரம் பராசக்தி நகர் ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் திருக்கோவில் மகா அஷ்ட பந்தன கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தமிழகத்தில் முதல் முறையாக பகவான் பரசுராமருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் அவனியாபுரம் பராசக்திநகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சௌராஷ்டிரா மக்களுக்கு பாரம்பரிய குலதெய்வமாக ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது.
15.03.25 அன்று கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட முதல் கால யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது.

அதனை தொடர்ந்து 2வது நாளாக ரேணுகாதேவி பரசுராமர் முருகன் விநாயகர் திருவுருவங்களுக்கு எந்திரம் ஸ்தாபித்தல் பிரம்மா பிரதிஷ்டம் அஷ்ட மருந்து பூசுதல் லலிதா சகஸ்ஹரநாம் வேத பாராயணம் 2ம், 3ம் கால யாக பூஜை நடைபெற்றது.
3ம் நாளாக நான்காவது கால யாக பூஜை பூர்ணாஹீதியுடன் நிறைவு பெற்றது.
பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையில் இருந்து எடுத்து வரப்பட்ட கலசத்திலிருந்த புனித நீரானது கோபுர கலசத்திற்கு ஊற்றப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் நிர்வாகஸ்தர்கள் கிருஷ்ணமூர்த்தி சுரேஷ்பாபு வினோத்குமார் மற்றும் சௌராஷ்டிரா குல பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு ரேணுக அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் தமிழகத்திலேயே முதன்முறையாக இத்திரு கோவிலில் பரசுராமருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.