• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் கைது

Byமதி

Nov 28, 2021

எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணி என்பவர் தனதுஅதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அப்போது, ரூ.1.37 கோடி மோசடியில் ஈடுபட்டதாக நெய்வேலியை சேர்ந்த பொறியாளர் தமிழ்ச்செல்வன் என்பவர் அளித்த புகாரின் பேரில் சேலம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சேலம் மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் இளமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவ்வழக்கில் முன் ஜாமீன் கோரி மணி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் தலைமறைவானார்.

ஒரு மாதகாலமாக தலைமறைவாக இருந்த மணியை தனிப்படையினர் இன்று கைது செய்துள்ளனர்.