• Wed. Jun 10th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

உயர் ரக போதை மருந்து கடத்திய வாலிபர் கைது

BySeenu

Mar 16, 2025

ரயிலில் உயர் ரக போதை மருந்து கடத்திய வாலிபரை கைது செய்து கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ரயில் மூலம் போதைப் பொருள் கடத்துவதாக கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் மத்திய ரயில்வே பாதுகாப்பு காவல் துறையினருடன், போதைப் பொருள் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் ஜெசிஸ் உதயராஜ் தலைமையிலான குழுவினர், கோவை ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்களை தீவிர சோதனை செய்தனர்.

அப்பொழுது பெங்களூரில் இருந்து கேரளாவுக்கு செல்கின்ற ரயிலில் வந்த முகமது சினான் (19) என்ற வாலிபர் சந்தேகத்திற்கு இடமான வகையில் கோவை ரயில் நிலையத்தில் வடக்கு பகுதியில் சுற்றித் திரிந்த அவரிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி சோதனை செய்தனர். அப்போது முகமது சினான்னிடம் இருந்து 150 கிராம் மெத்தாம்பெட்டமைன் என்ற உயர்ரக போதைப் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், காயங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அவரது நண்பருடன் பெங்களூரில் இருந்து கேரளாவிற்கு கோவை வழியாக போதைப் பொருள் கடத்தி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
அவரை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவருடன் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட வாலிபரை தேடி வருகின்றனர். மேலும் இது குறித்து போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.