• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கரூர் கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி வெள்ளி கருட வாகன திருவீதி உலா.

ByAnandakumar

Mar 15, 2025

மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் கொடியேற்றத்துடன் நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா காட்சி அளிக்கிறார்.

இந்த நிலையில் இன்று சுவாமி வெள்ளி கருட வாகனத்தில் திருவீதி உலா காட்சியளித்தார். ஆலயத்தில் இருந்து புறப்பட்ட ஸ்வாதி திருவீதியுலா முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தது.

கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற வெள்ளி கருட வாகன திருவீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் வழி எங்கிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

அதை தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு கூடியிருந்த அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.