



கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேட்டரி இருசக்கர வாகனம் திடீரென தானாக தீப்பிடித்து எறிந்தது.இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கரூர் தான்தோன்றி மலை பூங்கா நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் . இவர் அவுர கம்பெனியை சேர்ந்த பேட்டரி இருசக்கர வாகனம் வைத்துள்ளார். இந்நிலையில் இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள ஒரு பேக்கரி முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றுள்ளார். திடீரென நிறுத்தப்பட்டிருந்தது. அவரது பேட்டரி இரு சக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. சம்பவம் குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு எரிந்து கொண்டிருந்த வாகனத்தின் அணைக்கப்பட்டது.

இது குறித்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கரூர் மாவட்டத்தில் அடிக்கடி பேட்டரி இருசக்கர வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிவது வழக்கம் ஆகி வருகிறது.இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

